பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} குட்டுவன் கண் ணணுர்

மண்டியாக மடிந்து கிடந்ததாக, மற்றொருகால், அம் மல்லன், அங்கிலேயினின்றும் கப்பி எழுதற்காகவேண்டி மேற்கொள்ளும் முயற்சிகளைக் கெடுத்து அவன் பின் புறத்தே வளைந்து கிடந்தது. இவ்வாறு மல்லன மடக்கிப் போட்ட கிள்ளி, இறுதியில் பசித்த யானே பச்சிளம் மூங்கிலே முறிக்குமாறுபோல், மல்லனின் கலையும் காலும் முறிய மோதிக்கொன்று வென்முன் , வெற்றி பெற்று. வீறெய்தி நின்ற அவனேக் கண்டு பாராட்டிய புலவர், இத்தகைய பெருவீரனே அவன் கங்கையாகிய சித்தன் காணல் வேண்டும் ; கண்டால் முன்னேய வெறுப்பு ஒழிய விருப்டம் மிக்கு வியந்த பாாட்டலும் கூடும். வெறுப்பு ஒழியானுயின், இத்தகைய போற்றல் உடையானப் பகைத்தல் பாழ்தரும் என அஞ்சுதலாவது செய்வன் ; ஆகவே, அவன் வந்து காண்பாகை என விரும்பினர் புலவர்.

' இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பு ஒதுங்கின்றே : ஒருகால் வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே , நல்கினும், நல்கானுயினும், வெல்போர்ப் போாருங் கித்தன் காண்கதில் அம்ம! பசித்துப் பணைமுயலும் யானைபோல இருதலே ஒசிய எற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு கிலேயே.” (புறம்: அ0)

கிள்ளியும், மல்லனும் ஆற்றிய மற்போர் கண்டு பாராட்டிய புலவர், இயற்கையிலேயே போர்க்குணமும் வாய்க்கப்பெற்றவராவர்; புறத்தில் நெடுமொழித்துறைப் பொருள் அமையப் பாடிய அவர் பாட்டு, அவர்தம் போர் வேட்கையினை விளக்கி நிற்கிறது. கார்காலத்துப் பெரு, மழைத் தாரைபோல அம்புகள் வந்து தைப்பிலும், வயல், களிற் பிறழும் கெண்டை மீன்களே ப்போலும் வேல் பல வந்து பாயினும், யானைகள் பல குழவந்த தம் கோடுகளின் முனையின் நாட்டிக் குத்திலும், களம் விடுத்து