பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தந்தையார் 61

ஒடக் கருகாமை, படையாளர்க்குப் பீடும் பெருமையும் தருவதாம் என்றும், போர்க்களத்தே வென்று, களம் வென்ற சிறப்பறிந்து, வேந்தர் அளிக்கும் வளம் நிறைந்த ஊர்களைப் பெற்று வாழும் வாழ்விலும், இறந்து விண் அணுலகடைந்து, இறவாப் பேரின்பம் பெற்று வாழும் வாழ்வே பல்லாற்ருனும் சிறந்ததாம் என்றும் கூறும் புலவர்தம் பொன்னுரைகள் போற்றற்குரியனவாமன்ருே.

' காலமாரியின் அம்பு தைப்பினும்,

வயற் கெண்டையின் வேல் பிறழினும், பொலம்புனை ஒடை அண்ணல் யானை இலங்குவான் மருப்பின் துதிமடுத்து ஊன்றினும் ஒடல் செல்லாப் பீடுடை யாளர், நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல் யாவது படினே, மாசில் மகளிர் மன்றல் நன்றும் உயர்நிலை உலகத்து நுகர்ப.” (புறம் : உஅஎ)

புறத்தொழுக்காம் போர்க்களம் பாடவல்ல புலவர் சாத்தந்தையார், அசுத்தொழுக்காம் இல்லறப் பண்பும் பாடவல்லராவர்; அகத் துறை தழுவிய அவர் பாட்டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுள்ளது. பிறந்தகத்துப் பெரு வாழ்விலும், புகுந்தகத்து வறுமை வாழ்வே வனப்பும் வளமும் உடையதாம் எனக்கொள்வது தமிழ்க்குல மகளிர் தம் மாண்பு. அத்தகைய மாண்புடையாளொரு பெண் மலைபோல் உயர்ந்த பல நெற்கூடுகளை உடைய தன் தாய் மனே மறந்து, வெய்யிற் கொடுமையால் வெந்து, காயும் இலையும் கருகி, முடம்பட்ட மரங்களே காணப்படும் கொடிய வழியில் தான்் விரும்பிய தலைவைேடு அவன் உள்ளம் உவக்குமாறு உடன்போந்து அவனுாரில் அவனே மணந்து வாழ்வாளாயினள். அவர்தம் இன்பவாழ்க்கை இடையறலின் றிச் சென்றது. சின்னுள் ; ஒருநாள் தலைவன், பொருள்கருதிப் பிரிய எண்ணின்ை ; அதைக் குறிப்பால் அறிந்துகொண்டாள் அப்பெண் ; அதனல் வருத்தம்