பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - - குட்டுவன் கண்ணணுர்

மிக்கது; வருத்தம் மிகவே உடல் மெலிந்து வாடிற் று : - அவள் கைவளை கழன்றுகும் அளவு அவள் மெலிந்துவிட் டாள்; இதைக் கண்டாள் அவள் தோழி ; பிரிவான் என எண்ணியபோது இங்கிலேயாயின், அவன் பிரிந்துவிடின் இவள் நிலை என்னும் என எண்ணினுள்; வருத்தம் மிக்கது: விரைந்து தலைவன் பால் சென்ருள். ஐய இவள் பிறக் தகத்துப் பெருஞ்செல்வத்தை மதியாது வந்தது, கின் அன்பு ஒன்றையே கருசியன் ருே அதனேயும் பெருத வாறு பிரிந்துசெல்லின் இவள் என்னவாள்? உற்ருர் உறவி னரை மறந்து, உன் பின் வந்த தவற்றிற்குத் தண்ட னேயோ, இன்று இவள் கைவளை கழலுமாறு மெலிந்து கண்ணிர்விட விட்டுப் பிரிந்து செல்லுதல் இங்கிலே காண யான் மிகவும் வருந்துகின்றேன் ” என்றெல்லாம் கூறிப் போக்கினேப் போக்கினுள். இங்கிகழ்ச்சியைப் பாட்டாக ஆக்கிப் பழந்தமிழ்ப் பெண்ணுெருத்தியின் பேருள்ளம் உணரும் பெறற்கரும் பேற்றினத் தந்துள்ளார் புலவர்.

'கோகோ யானே : நெகிழ்ந்தன வளையே :

செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளாை விண்டுப் புரையும் புனர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை ஒழியச், சுடர்முழுது எறிப்பத் திாங்கிச், செழுங்காய்

முடமுதிர் பலவின் அத்தம், நும்மொடு கெடுதுணையாகிய தவருே வையெயிற்றுப் பொன் பொதிந்தன்ன சுணங்கின் - இருஞ்சூழ் ஓதிப் பெருந்தோ ளாட்கே.” (நற் : உசு)