பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9–65, செங்கண்ணனுர்

செங்கண்ணஞர் என்ற இப்பெயர், புலவர்க்கு உறுப் புப் பற்றிவந்த பெயான்று; செங்கண்ணணுர் என்ற பெயரை அக்கால மக்கள் பலரும் தம் இயற்பெயராகக் கொள்ளும் வழக்கினராவர். இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத் தது ஒன்றே அது அகநானூற்றில் வந்துளது.

தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதினன்; அவ்வாறு அவன் பிரிதல் அறநெறியாம் எனவுணர்ந்தும், அவன் பிரிவாலாம் துயர் பொறுக்கமாட்டாது வருக்தினுள் தலைவி வருத்தத்தால் உடல் மெலிய, வளை கழலவும் ஆயின; கண்கள் நீர்காலவும் தொடங்கின; ஆனுல் அவன் போகும் காலத்தே தான்் இவ்வாறு துயருற்ற காட்சி யோடு அவன்முன் கின்று வழி அனுப்புதல் சன்றன்று என்று எண்ணிய உள்ளத்தளாய்த் தன் துயரினே மறைக்க முனேகின்ருள் ; ஆணுல், அஃது அவளால் இயலாதுபோ யிற்று. இதனுல் கான் வருந்தும் வருத்தம் புறத்தே புலனுகாவாறு மறைத்தாவது செல்வேம் என்ற நோக்கின. |ளாய், வளைகழலுதல் அறியாவாறு அதை மேலேற்றிச் செறுத்துக்கொண்டாள் ; கண்ணிர் தெரியாவாறு தலை கவிழ்த்துக்கொண்டாள் ; நிலத்தைக் கால்கள் கீற அவன் முன் அமைதியாக கின்ருள். அவ்வாறு கிற்கும் அவள் கிலையினையும், அவள் மனத்துயரையும் அறியாதவனல்லன் தலைமகன்; அவன் அவள் நெற்றியைத் தடவிக்கொடுத்தும், மயிரைக் கோகிவிட்டும் அன்புரை பல வழங்கி, அவள் உள்ளத்தை ஒருவாறு தேற்றிப் பிரித்தான்். பிரிந்தா னேனும், அவன் உள்ளத்தே தன் மனேவியின் துயருறு கிலே கின்று விலைபெற்றுவிட்டது. ஆகவே உள்ளம் சோர்ந் தான்் ; உள்ளச்சோர்வால் வழிநடையும் அரிதாயிற்று : தளர்ச்சி நீங்க ஒரிடத்தே சிறிது படுத்தான்்; உறங்கியும் விட்டான்; எனவே, கனவாம் என்ப ஆதலின் அவனைப்