பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச.ை சேந்தன் கண்ணனுக்

சேந்தன் என்பார்க்கு மகனுய்க், கண்ணஞர் எனும் இயற்பெயர் பூண்டு பிறந்தமையான் இப்புலவர் சேந்தன் கண்ணஞர் என அழைக்கப்பெற்றுளார் ; இப்பெயர், சேந்தன் எனும் தங்தை பெயரின் ஈற்று அன்கெட ஆண்டு அம் எனும் சாரியை வந்துகிற்க சேந்தங்கண்ணணுர் எனும் வடிவிலும் வழங்கப்பெறும். புலவர் சேந்தங்கண்ணனுர், பாடிய இருபாக்களும் நெய்தல்கிலத்தையே பாராட்டி யிருப்பதாலும், பெரிய கடலிடையே புகுந்து, ஆண்டு உலாவும் சுருeன்களுக்கு அஞ்சாது மூழ்கி, வலம்புரி முத்துக்களை வாரிக்கொணரும் பாதவர், மாலைக்காலத்தே, சங்கு முழங்கும் கொற்கைத் துறையிடத்தே, கரையில் உள்ளார் மகிழ்ந்து ஆரவாரம் செய்து வரவேற்கக் கரை சேர்வர் எனக் கொற்கைத்துறையினேயும், ஆண்டுகிகழ் முத்துக்குளியல் தொழிலையும் சிறப்பித்துப் பாடியுள்ளமை யாலும், இவர், பாண்டிநாட்டில் கொற்கைத் துறையினைச் சேர்ந்த செய்த ல் கி லத் தவ ரா வர் எனக் கோடல் பொருந்தும்.

"இலங்கிரும் பாப்பின் எறிசுரு நீக்கி,

வலம்புரி மூழ்கிய வான்தியில் பாதவர் ஒலிதலேப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்.”

(அகம் : கூடும்.) தன்னேக் கண்டு காதலித்து அன்புகாட்டிய தலைவன் வாாதொழியக் கண்டு வருந்திய நெய்தல் கிலப்பெண் ஒருத்தி, கரிய கால்களையுடைய வெளிய நாராய் ! நீ, கின் சுற்றத்தோடு சென்று வளைந்த ர்ேப்பரப்பிலுள்ள இரையை அருந்திப் பறந்து வருதலையே விரும்பினேயாயினும், வின் இனத்தோடு சிறிது பொழுது ஈண்டு இருந்து, யான் கூறும் சில சொற்களைக் கேட்பாயாக! தலைவன் பிரியத் தனித் துறையும் எனக்கு இம்மாலைக்காலம் பெரிதும் வருத்தம் தருவதாயுளது; என்மாட்டுப் போன்புடைய நீ, இதை