பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக, தத்தங் கண்ணனுர்,

இவர் இயற்பெயர் கண்ணன் இவர் தந்தை பெயர் கத்தன் மதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர். இவர் இயற்றிய ஒரு செய்யுள் நெடுந்தொகை, கித்திலக் கோவைக்கண் இடம் பெற்றுளது. அருள், பொருள் ஆகிய இரண்டின் இயல்பினே நன்குனர்ந்தவர் இவர்.

“அருள் என்னும் அன்பீன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு,” என்று கூறுகிருர் திருவள்ளுவனுர், அன்பின் வழியே அருள் பிறந்ததாயின், அவ்வருள் பொருளின் துணைகொண் டன்றி வாழ்தலோ, வளர்தலோ இயலாது ; அருள் உள்ளம் உடையார், பொருளையும் பெற்ற வழியே, தம் அருள் சிறைவேறப் பெறுவர் ; பொருள் பெருது, அருள் கட்டும் பெற்றவர், கம்மால் அருள் செய்யப் பெற்றி உயிர்களின் உறுதுயர் போக்கித் துனே புரிதல் இயலா திாம். ஆகவே அருளுடையார் பொருளையும் உடன் பெற்றிருத்தல் வேண்டும். இந்த அரிய உண்மையைஅருளிலும் பொருளே சிறப்புடையதாம் என்பதை - தலே மகன் ஒருவன் வாயில் வைத்துக் கூறியுள்ளார் நம்புலவர்,

'இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்

அருள் நன்கு உடையாாயினும், ஈதல் - பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதாகுதல் யானும் அறிவேன்மன்.'

(அகம் : க.கூடு) இப்பாட்டில் கமுகின் குலையினே விளங்கக் கூறிப் பாராட்டும் பண்பு படித்து இன்புறற்குரியதாம்.