பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூங். தீன் மிதி நாகனுர்.

இவர் பெயர், தீன் மிதிநாகன் எனவும், தின்மதிதாசன் எனவும், தீமிதிநாகன் எனவும் பல்வேறு வகையாக எழுதப்பட்டுள்ளன ; நாகன் என்ற இவர் பெயர், இவர் குறிஞ்சி கிலத் தொடர்புடையராவர் என்பதை உணர்த்து கிறது . இவர் பாடிய பாட்டொன்றும், அக்குறிஞ்சி கில ஒழுக்கமே தழுவி வந்திருப்பது மேற்கொண்ட முடிபை உறுதி செய்கிறது.

தன்னேக் காதலித்த தலைவன் வரைந்துகொள்ள எண்ணுது, களவொழுக்கமே விரும்பி ஒழுகுவதால் உண் டாம் துயரெண்ணி வருக்கிய ஒரு தலைமகள், அவ்வருத்த மிகுதியால், உடல் வனப்பிழந்து வாடிகுள் தன் மகளேப் பேணிக்காக்கும்பேரன்பினளாய தாய், அவள் வாட்டத்திற் காம் காரணம் இது என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றலுடையளாவள்; அவள் அஃதறியின், தலைவியின் ஒழுக்கத்திற்குக் கேடுண்டாம் ; அவள் அறியா வண்ணம் காத்தலோ அரிது ; இதை உணர்த்தாள் தலைவியின் கோழி; தலைவியின் கற்பொழுக்கம் கெடாமைக் காத்தலைக் கடமையாக உடையவள் அவள் ; இதற்கு வழி, தலைவன் அவளை விரைவில் வரைந்து கொள்வதே என உணர்ந்தாள் ; உணர்ந்த கணேத் தலைவனுக்கு உணர்த்த விரும்பினுள் ; ஒரு நாள், தலைவன், அவர்கள் வீட்டின் புறத்தே வந்து, அவர்கள் வருகையினே எதிர்நோக்கி கின்றிருந்தான்் ; இதை உணர்ந்த தோழி, அவன் கேட்குமாறு, தலைவியை நோக்கி, தோழி! கின்வாடிய தோள், வனப்பிழத்தற்குக் காரணம், இது என்பதை நம் தாய் எளிதில் உணர்வள்; ஒனோ வழி, அவள் அஃது அறியாளாய், அதற்காம் காரணம் யாது என வேலனேக் கேட்பின், அவன், முருகனுல் வந்தது ; ஆகவே வெறி யெடுக்க என்றே கூறுவன் ; நம் தாயும் அவன் கூறியதை உண்மையென்றே கொள்ளின் நம் வீட்டில் வெறியாட்டு சிகழ்தலோ உறுதி; மகளுற்ற நோய், மன நோய் என