பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ö குட்டுவன் கண்ணணுர்

அதியும் மாண்பிழந்து நம் தமர் மேற்கொள்ளும் அறிவி லாச் செயலைக் காண நம் தலைவர் ஆண்டு வருவாாக ! என்று கூறிஞள். தாயின் அறியாமை கண்டு நகைப்பாள் போல், தலைவன் வரைந்து கொள்ளாமையால், தலைவிபடும் தயாம் இது ; அதைத் தாயும் அறிந்துளாள் அவள் அத்துயர்க்காம் காரணம் இஃது என அறியின் எதம் உண்டாம் ; அவள் அஃதறியா முன்னர் வாைக்து கொள்வது தலைவன் விரைந்து மேற்கொள்ள வேண்டிய கடமையாம் என்பதை அறிவுறுத்திய தோழியின் அறிவாற்றல் புலப்படப் பாடிய புலவர், தலைவிக்குண்டான நோய், ஆராய்ந்து காண்பார்க்கே தலைவன் தந்த நோய் எனப் புலப்படும்; ஆராயும் அறிவின்றிக் காண்பார்க்கு, அது முருகனல் வந்தது என்றே புலப்படும்; அத்தகைய நோய் தரும் ஆற்றல் உடையவன் தலைவன் என்பதைத் தலைவன், வாளா நோக்குவார்க்கு, கைகரந்த பிடி போன்ற தோற்றத்தையும், ஆய்ந்து அறிவார்க்குத் தன் உண்மைத் தோற்றத்தையும் தரும் துறுகல் நிறைந்த காடுடையவன் என்று கூறுவதால் விளங்க வைக்கும் புலமைத்திறம் பாராட்டற்குரியதாம்.

' மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்

வென்றி நெடுவேள் என்னும் , அன்னையும் அது என உணருமாயின், ஆயிடைக், கூழை இரும்பிடிக் கைகாந்தன்ன கேழிருந் துறுகல் செழுமலை நாடன் வல்லே வருக தோழி! நம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே.” .

. r (குறுங் : க.க.க)