பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ச. துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனும்

கொற்றனர் எலும் இயற்பெயரினராய நம் புலவர், தம் பெயர்க்கு முன்னே, சிறப்பளிக்கும் சொற்கள் பலவற்றைம் பெற்று ளாராயினும், அவற்றுள் எதுவும் அவர் வரலாறு உணர்த்தும் செறியில், துணே புரியும் ஆற்றலுடையதாய்க் காணப்பெறவில்லை. பொருள்வயிற் பிரிவே பொருளாகப் பாடியுள்ளமையானும், அழகிய காதணி ஒன்றை உவமை யாகக் கூறியுள்ளமையானும், புலவர், வணிகர்குலத்து வந்தவரோ எனக் கோடற்கும் இடமுண்டாம் என்ப : இவர் பெயரால் ஏற்றிணைக்கண் ஒரு பாட்டு உளது.

தலைவன், கொடிய மலைவழிகளைக் கடந்து சென்று ளான்; அவன் பிரிவால் கானு று துயரினேயும், அவன் சென்ற மலைவழியின் கொடுமையினையும் எண்ணி எண்ணி வருந்தினுள் தலைவி ; அவரை, அம்மலைநெறியிற் போக்கி விட்டு வாழ்வதினும், என் உயிர் வாழாமையே நன்றாம்என்று கூறி விம்மி, விம்மி அழத் தொடங்கிவிட்டாள் ; அவள் வருத்தமிகுதியால், அவள் உடல் வாட, அவள் உடலிற் பொருந்தியிருந்த வளமுதலாம் அணிகள் நெகிழ்ந்துவிழ லாயின; தலைவியின் துயர்நிலை கண்டாள் தோழி; தலைவர் பொருள்தேடப் போயுள்ளார் ; பொருள்தேடித் தந்தா லன்றி இல்லறம் இனித நடவாது ; இல்லறம் மேற். கொள்வது உற்ருர், உறவினர், உயிர்போலும் நண்பர்கள் இவரை வாழ்விக்கவும், தாமும் பிறர்போற்றும் வாழ்வு பெறவுமேயாம் ; அவ்வாழ்வு வாழப் பொருள் மிகமிகத் தேவை; இதை மறந்தமையினலேயே தலைவி வருந்து கிருள் ; கடமை மறந்த அவள் உள்ளத்தே காதல் இடம் பெற்றுளது ; கடமையினே கினேவூட்டின், தன் காதற். பெருமையினே மறப்பள் என உணர்த்தாள் ; உடனே, அவள்பாற் சென்று, அன்புடையாய் ! தலைவர், பிரிந்து சென்றது, நண்பர்கள் நல்வாழ்வு வாழவும், நீ அணிபல அணிந்து சிறக்கவும் துணைபுரியும் பொருள்தேடிக் கொணர்தற்கு அன்ருே இல்லறம் நல்லறமாதற்கு, நாடு

கு. க.-6