பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{#. #ส” . தேவனுர்

நாகன், பூதன் என்ற பெயர்களைப் போன்றே தேவன் என்ற பெயரையும் பண்டைத் தமிழ்மக்கள் தம் இயற் பெயராகப் பயில மேற்கொண்டிருந்தனர்; பண்டவாணிகன் இளங்தேவன், தமிழ்க்கூத்தன் நாகன்தேவன், பாரதம் பாடிய பெருந்தேவன், ஈழத்துப்பூதன் தேவன், வாயிலான் தேவன், கடுகு பெருந்தேவன் போன்ற பெயர்களே நோக்குக. தேவளுர், சோளுட்டுச் சிறப்புடை ஊர்களுள் ஒன்ருய ஆர்க்காட்டினே அறிந்து பாராட்டியுள்ளமையால், இவரை அந்நாட்டினராகக் கொள்ளுதல் பொருந்தும். “ ஆர்க்காடு, சோழர்க்கு உரியது ; அச்சோழர் ஒலிக்கும் மணிகளே இருபாலும் நாலவிடக்கொண்ட யானைகளையும் பான்னலாய பேரணிகளையும் உடையவராவர். ஆர்க் காட்டுத் தெருக்கள் ஆடும் கொடிகளால் அழகுற்றுத் தோன்றும் ; அத்தெருக்கள கள் விற்கும் கடைகளையும் கொண்டிருக்கும் ; ஒயாது ஒடும் தேரொலி, அத்தெரு வெலாம் முழங்கும் ” எனச் சோழாைப் பற்றியும், அவர்க் குரிய சோனுட்டினேயும் சிறப்பித்துப் பாடியுள்ளார் :

' படுமணி யானைப் பசும்பூட் சோழர்

கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட் டாங்கண் கள்ளுடைத் தடவிற் புள் ஒலித் தோவாத் - தேர் வழங்கு தெருவு.” - (நற் உஉஎ)

தக்க இன்ன, தகாதன இன்னவென்று ஒக்கவுணரும் உணர்வும், உள்ளத்தை அது சென்றவழிச் செல்லவிடாது, தீதொரீஇ, நன்றின்பால் உய்க்கும் ஆற்றலும் உடையவரே அறிவுடையராவர் ; தக்க இன்ன, தகாதன இன்ன என அறிந்து அவ்வழி கடப்பதே அறமாம். ஆகவே அறிவும், அறமும் பிரிக்கலாகாப் பண்புடையனவாம் எனல் பொருத் தும்; எங்கே அறிவுண்டோ, அங்கே அறம் உண்டு; எங்கே அறம் உண்டோ அங்கே அறிவுண்டு; அறவுணர்வு இலா தவர் அறிவிலாதவராவர்; அறிவு அற்றவர், அறம் அற்ற