பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூன. தேவகுலத்தார்

தேவகுலம் எனும் சொல், இறைவன் உறையும் கோயில் எனும் பொருள் உடையது ; ஊராஞேர் தேவ குலம்’ எனும் தொடரையும் காண்க. தேவகுலத்தார் எனும் புலவர்தம் பெயரும், அவர் பாடிய பாட்டு, குறுங் தொகைக்கண், இறையனுர் பாடிய 'கொங்கு தேர் வாழ்க்கை” எனும் செய்யுளை அடுத்து வைக்கப்பெற்றிருப் பதும் மதுரைத் திருக்கோயிலோடு இவர் கொண்டிருந்த யாதோ ஒரு தொடர்பு குறித்தேயாம் எனக் கூறுவர் சிலர்.

தலைவன் ஒருவளுெடு தான்் கொண்ட நட்பின் பெருமை இத்தன்மைத்து எனப் பாராட்டிக் கூறுவாள், " அக்கட்பு, பரப்பால் கிலம்கொள்ளும் பெருமையினும், அது பெரிது ; உயர்வால் வானம் பெறும் பெருமையினும் பெருமையுடைத்து ; ஆழத்தால் கடல்பெறும் பெருமை வினும் பெருமை உடைத்து' என்று கூறினுள் எனப் பாடித் தலைவன் தலைவியர்க்கிடையே உண்டாம் நட்பின் இயல்பு இத்தன்மைத்தாதல் வேண்டும் என விளங்கவைத் துளளாா,

'கிலத்தினும் பெரிதே ; வானினும் உயர்ந்தன்று :

நீரினும் ஆர்.அளவின்றே; சால் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனெடு நட்டே."

(குறுங் : -).