பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. நெடுநல்வ ாடை

இது, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டி யன் நெடுஞ்செழியனேப் பாராட்டிய பாட்டு. நெடுஞ்செழி .யன், தலையாலங்கானத்துச் செருவில், -

சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, ாாாரி கறவின் எருமை யூரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மா, இயல்தேர்ப் பொருநன்.”

ஆகிய எழுவரையும் ஒரு பகலில் வென்ருன் என விளங்கப் பாாட்டிய நக்கீசர், படைவீரர்பால் பரிவு காட்டும் அவன் புண்புடைமையினே இதிற் பாராட்டியுள்ளார். பகைவயிற் பிரிந்து சென்று பாசறைக்கண் தங்கியிருக்கும் தலைவனப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயர்திர, பகை வென்று, அவன் விரைவில் 'மீள்க’ எனத் தலைவியின் மாட்டு அன் புடையாள் ஒருத்தி, வெற்றிக் கடவுளாகிய கொற்றவை யைப் பரவுவதாகப் பாடப் பெற்றுளது.

வாடைக் காற்று, ஐப்பசி, கார்த்திகைத் திங்கள்களில் தமிழ்நாட்டில் வீசும் வடகிழக்குப் பருவக் காற்றைக் குறிக்கும். கார்காலத் தொடக்கத்தே மீண்டு வருவேன்’ எனக் கூறிச் சென்ற தலைவன், கார்காலமும்போய்க் கூதிர்க் காலம் வந்தும் வாரானுக, அவன் வரவு நோக்கி வருந்தி யிருக்கும் தலைவிக்கு ஒருநாள் ஒருழிபோல் தோன்றும்ாத லின், அவள் ஆற்றியிருக்கும் வாடைவீசும் கூதிர்க்காலம் நெடுமை உடையது எனக் கூறப்பட்டது , கூதிர்க்காலம் பிரிந்திருப்பவர்க்குப் பெருந்துயர் தரும் இயல்புடையது எனினும், போகம் வேண்டுவோர், புகழ்ச்சொல் பெருர்’ என உணர்ந்த தலைவன், வினேமேற் சென்ற வேட்கையால் காமத்தை வென்று பாசறைக்கண் இருத்தலான் நன்மை உள்ள வாடை என்றும் கூறப்பட்டது. அன்றியும், வாடைக்காற்று, குளிர் மிகுந்து கொடுமை செய்யுமேலும்,