பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை 99

முன் முத்தாம் தாழ்ந்த தன் மார்பிலே, மங்கல நாண் ஒன்று மட்டுமே காழ, பொற்ருெடி இருந்து பொலிவு பெற்ற முன்கைகளில் அவற்றிற்குப் பதிலாகச் சங்கால் இயன்ற சிறு வளையல் அணிந்து காப்பு நாணேயும் கட்டி, பூத்தொழிலால் பொலிவுற்ற சிறந்த அகில நீக்கிவிட்டு, மாசேறிய நூல் ஆடையை அணிந்து, எண்ணெய் இட்டுக் கோதி முடியாமையால் நெற்றியில் வீழ்ந்தலையும் தலை மயிரையும், மகரக் குழை கிடந்து மண்புற்ற இடத்தில் சிறு தாளுருவியைப்பெற்ற காதுகளையும், வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற மோதிரத்திற்குப் பதிலாக முடக் கென்னும் சிறு மோதிரம் கிடக்கும் விர்லினேயும் உடைய ளாகி, கரை திரை உற்று நல்லறிவு பெற்று விளங்கும் செவிலித் தாய்மார்கள் அவள்பால் வந்து ஏதோ காரணம் கூறி, கின் இன் துணையோர் இன்னே வருகுவர்” என்று இனிய வார்க்கைகள் உரைப்பவும், அவற்றைக் கேளாது மிகவும் கலங்கி. கட்டிலின் மேல்விதான்த்தில் மெழுகு படாத்தில் எழுதியுள்ள கிங்களின் பக்கத்திருக்கும் உர்ே கிணியைப் பார்த்து, ' நாமும் உரோகிணியைப் போன்று தலைவரைப் பிரியாமல் ஒன்றியிருக்கப் பெற்றிலோமே ' என்று சிந்தித்துப் பெருமூச்செறிந்து, கண்களினின்றும் ததும்புகின்ற நீரைத் தனது சிவந்த விரலால் எடுத்துத் தெறித்துக் கோழியர் உறக்கம் உண்டாகுமாறு அடிகளைத் தடவிக் கொடுக்கவும், உறங்காது, ஒவியம்போல் அசை வின்றித் தனித்துத் துயர் உற்றுத் தவிக்கும் அன்பாற் சிறந்த அரிவைக்கு, அவள் பிரிவுத் துயர் திருமாறு,

பகையரசர்களுடைய யானைப் படைகளேக் கொன்று அழித்துப் பின் அப் பகையரசர் வாட்களால் போழப்பட்ட விழுப்புண் பெற்ற வீரர்களைக்கண்டு அன்புரைகூறி ஆற்றிச் செல்லும் பொருட்டு, விளக்குகள் குளிர்ந்த வாடைக்காற்று அடிக்குங்தோறும் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்து எரிய, கலையில் வேப்பந் காரையும், தோளில் வேற்படையினையும் உடைய படைத் தலைவன், புண்பட்ட வீரரைக் காட்டிக் கொண்டே முன்