பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை 11

'ஆரியம் ஒன்று , தமிழ்தீது’ என உரைத்த

காரியத்தால் காலக்கோட் பட்டானேச்-சீரிய அந்தண் பொதியில் அகத்தியஞர் ஆணையால் செந்தமிழே நீர்க்கசுவா கா. ”

என்று பாடி அவனேப் பிழைப்பித்தார். பேராசிரியர், இவ்விரு பாக்களேயும் எழுதி, இவை தெற்கண் வாயில்கிற வாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீசர், ஒருவன் வாழவும், ஒருவன் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின,” என்று எழுதுவர். இதனுல், நக்கீசர், பேராசிரியர் காலத்திலேயே, ஆக்கவும் அழிக்கவும் வல்ல

சிறைமொழி மாந்தராகப் பெருமை செய்யப் பெற்ருர் என்பது புலம்ை.

மேலும், கற்பனேக் களஞ்சியமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், இவரை, இனவறு குறுமுனி இலக்கணம் பெறப்புனேதரும் இலக்கியப் புலவர் சிங்கம்,' எனப் போற்றுவதும், கந்தபுராண ஆசிரியராகிய கச்சியப்ப சிவாசாரியரும், இவரைப், பொய்யற்ற கீரன் முதலாம் புலவோர்,” எனப் புகழ்வதும், இவர் பெருமை உணர்த்து QJ@T ó了@ö了凸5。

மதுரை மேலமாசி வீதியின் மேல்சிறகில் அமைந்து, சங்கத்தார் கோயில் என வழங்கும் நக்கீரர் கோயிலும், திருப்பாங்குன்றத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா நான்காம் நாளன்று ஈடைபெறும் நக்கீரனுரைச் சிறை மீட்டருளிய திருவிழாவும், அன்று நிகழும் நக்கீரர் திருவுருவ உலாவும், நக்கீரர்தம் தெய்வத்தன்மைக்குச் சான்ருதலும் காண்க. இவ்வாறு, புலவருட் புலவர், மறை மொழிவல்ல நிறைமொழிப் புலவர் என்றெல்லாம் போற்

றப்படும் பெருமை உடையவர் சக்கீரர். -