பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ந க் கீ ர ர்

இயல்பு இஃது என உணர்ந்த மக்காள் செல்வத்துப் பயன் இல்லார்க்குக் கொடுத்து உதவுதலாம்; செல்வத்தின் அவ் வியல்பை மறுத்துத் தாமே தனித்து உண்ண விரும் புவாராயின், அவரால் அதை உண்டு தீர்த்தல் இயலாது; அவர்கள் நுகர்ச்சிக் கிடையூருய் நாமுயிரம் வந்துசேரும்.” என்று கூறியுள்ளார்.

' தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி,

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான், கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி, உடுப்பவை இரண்டே ; பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல் ; - துய்ப்பேம் எனினே தப்பு பலவே.” (புறம். க.அக)

செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற இவ்வுண்மையினே மற்றும் பல இடங்களிலும் எடுத்துரைத்துச் செல்கிருர்; கணவன்மார் கடத்தற்கரிய வழிபல கடந்து பொருள் பெற்று வருதல், கம்வாயிலில் வந்து இருகை ஏந்தி நிற்பார்க்குப் புதிய பொருள்களே அவர் வேண்டும் அளவும் விரும்பி அளிப்பதற்காகவே என்ற உண்மையை மகளிர் உணர்ந்து மற்றையோர்க்கு உரைப்பதாகவும் உணர்த்தி யுள்ளார்: ... ', : . . . -

இாப்போர் எந்துகை சிறையப் புரப்போர் புலம்பில் உள்ளமொடு புதுவதக் துவக்கும் அரும்பொருள் வேட்டம்.” (அகம். -அக)

இவ்வாறு செல்வத்துப் பயனே ஈதல்; செல்வத்துப் பயனே ஈதல்,” என எங்கும் எடுத்து இயம்புவது, கமக் குப் பொருள் வேண்டும் என்ற புன்மையாலன்றி, ஏழைக ளாகி இரப்போர் உள்ளம் எரிமலையாகி இன்னல் பல நேராமல் நாடுவாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலாம்.