பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணகளம் 19

உலகில், ஒருவர்க்கு கண்டர்போல் நல்லன செய்வார் வேறு எவரும் இலர் ; ஆகவே, ஒவ்வொருவரும் தக்கார் ஒருவரைத் தம் உயிர் நண்பராகக் கொள்ளுதல் வேண்டும்; ஆனுல், அக் கண்பர்களே மேற்கொள்ளுங்கால் மிகவும் விழிப்புடைய ராதல் வேண்டும்; ஒருவர் தோற்றத்தைக் கண்டே அவர்கள் இயல்பினே உணர்தல் எவர்க்கும் இயலாது; உள்ளுறுப்புக்களையும், உயிர்த் துடிப்பினையும் படம் பிடித்துக் காட்ட வல்ல அறிஞர்கள், உள்ளத் துடிப் பினே உள்ளவாறு உணர்ந்து அறிவிக்கும் ஆற்றலைப் பெற்ருரல்லர் ; தோற்றத்தால் நல்லவர் எனப்பட்டார் இயல்பால் தியாதலையும், இயல்பால் நல்லவர், தீயார் போல் தோன்றலையும் உலகில் காண்கிருேம். ஆதலின், நண்பர்களே மேற்கொள்வோர், தோற்றப் பொலிவு கண்டு கல்லார் எனக் கொண்டுவிடுதல் கூடாது; நண்பர்கள் உள்ளுணர்வு ஒத்தவராதல் வேண்டும்; உள்ளத் தூய்மை உடையதாதல் வேண்டும்; இவ்வாறன்றி, அற்ற குளத்தில் அறுர்ேப்பறவைகளைப்போல் உறின் கட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலாரையும், வினேவேறு சொல்வேறு பட்டாரையும் நண்பராகக் கொள்ளுதல் கூடாது ; ஒருவரை நண்பராகக் கொண்ட பின்னர் அவரைப் பிரிதல் அத்துணை எளிய செயல் அன்அ ; பேயொடு பழகிலும் பிரிவரிது. ஆகவே, ஆராயாது மேற்கொண்ட நண்பர்கள் நல்லால்லாயின், அவதால் பலகோடி துன்பம் உண்டாம். அதனுல் நண்பர்கள் தொன்மையான குடியிலே வந்தவராய், உயிர் ஒத்துப் பழகும் உயர்வுடையாய், குற்றத்தின் நீங்கிய உள்ள முடையாய் இருத்தல் வேண்டும் ; அத்தகைய நண்பர் களைப் பெற்ருர் பெரும்பேறு பெற்றவராவர். காட்டு மக்க ளுக்கு எல்லன கூறி, கன்னிலையில் வைக்க எண்ணும் நக்கீசர், நட்பின் இயல்பினை நன்கு விளக்கி உள்ளார். உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு கட்பில், . செயிர் சீர் நெஞ்சமொடு செறிந்தோர். (அகம். உ00) நக்கீரர், கடவுளரிற் சிவனேயும், மக்களிற் செழி பனேயும் தவிர பிறர் எவரையும் பாடார் என்ற குற்றச்