பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ந க் ோர்

சாட்டினைச் சிவபுராணமுடையார் கூறுவர்; ஆனால், நக்கீசர் பாக்களேப் பயின்றவர் எவரும் அவர்க்கு அத்தகைய குற்றச்சாட்டினைக் கூற அஞ்சுவர். பிறைமுடிச்சடை யானேயன்றிப் பிறரைப் பாடார் என்ற குற்றச்சாட்டு பிழையுடையது என்பது திருமுருகாற்றுப்படை ஒன்றினு லேயே உறுதி செய்யப்படும் ; இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனேச், சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகிய நாற்பெருந் தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பாடிய நக்கீசர்பால் பிறதெய்வ வெறுப்பு உண்டு எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும் ? நக்கீசர், சமயநெறியில் சமரச உணர்வுடையவராவர் என்பது முக்காலும் உறுதி, சமயநெறியில் அவர்பால் காணப்படும் இச் சமரச உணர்வு, உலக குெறியிலும் இருக்கக் காணலாம். நெடுஞ்செழியனேப் பாராட்டி நெடுநல்வாடை பாடினர் என்பது உண்மை; ஆனால், அவனைத் தவிரப் பிறர் எவரையும் பாடினரல்லர் எனல் பொருந்தாது. -

இலவந்திகைப் பள்ளித்துஞ்சியான்மாறனேப் பாராட்டி யுள்ளார் ; சோழநாட்டுப் பிடஆர்கிழான் பெருஞ்சாத்தனே " மதவலேனே; அவனேயன்றிப் பிறர் உள்ளேனே.” என்று பாராட்டியுள்ளார்; அகநானூற்றுப் பாடல் ஒன்றிலேயே, - . .

"ஆரக் கண்ணி அடுபோர்ச் சோழர்,

அறங்கெழு கல்லவை உறங்தை." - எனச் சோழரையும், அவர் உறங்தை நகரையும்,

அண்பல கடந்த முரண்கொள் தான்ே, வாடா வேம்பின் வழுதிகூடல் நாளங்காடி. எனப் பாண்டியரையும், அவர் கூடலேயும்,

ஆள்சோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக் கடும்பகட் டியான நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் தருஆர் முன்துறைத் தெண்ணிர் உயர்காைக் சுவைஇய தண்ணுன் பொருசை.

3 - (அகம். கங்)