பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நக்ரேர்

இவ்வாறு நடுங்கவரும் அருவி, பெண்யானைகள் நடுங்குமாறு எடுத்தெறிந்து, ஆண்யானைகளின் வெள்ளிய தந்தங்களே வேண்டும் அளவு வாரிக்கொண்டு, பொன்னேயும் மணியை யும் வாரி இறைத்துக்கொண்டு, பொன்னின் டொடிகளைத் தூவிக்கொண்டு, வாழைமரத்தையும் தெங்கின்குலைகளேயும் மோதிக்கொண்டு, மிளகுக்கொடிகள் சாய, மயிலும் கோழி யும் அஞ்சி ஒட, காட்டுப் பன்றிகளும் கரடிகளும் முழை களினுள்ளே ஒடிஒளிய, காட்டுப்பசுக்கள் அம்மா' என்று அலற, இழும் எனும் ஒசை எங்கும் பரவ விழுந்து ஒடு கிறது, என்று கூறும் அத் தொடர்கள், அருவிக்காட்சியை அகங்கொள்ளக் காட்டுவதோடு, தொடர்களின் சொல் லோசை அருவியோசையை ஒலிக்கவும் செய்யும் அருமையே அருமை ! -

“பலவுடன் -

வேறுபல் துகிலின் துடங்கி, அகில்சுமந்து, ஆரம் முழுமுதல் உருட்டி, வோல் - பூவுடை அலங்குசினை புலம்ப வேர்ண்ேடு, விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதைய, நன்பல ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை நாக எறுமலர் உதிர, யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப், பூ.நுதல் இரும்பிடி குளிர்ப்பு வீசிப், பெருங்களிற்று முத்துடை வான்கோடு கழிஇக், தத்துற்று, நன்பொன், மணி நிறம் கிள்ர்ப், பொன்கொழியா, வாழை முழுமுதல் அழியத், காழை இளநீர் விழுக்குலே உதிரத் தாக்கிக், கறிக்கொடிக் கருந்துணர் சாயப், பொறிப்புற மடகடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக், கோழி வயப்பெடை இரியக், கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடாளைச் செறியக், கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச், சேணின்று

இழும் என இழிதரும் அருவி. ’

(கிருமுருகு உகடுங்கசு)