பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணாலம் 33

என்றும் பொய்யாது பெய்யும் இயல்பினதான் மேகம், புதுமழை பெய்து விட்டது ; வெள்ளம் பாயும் பள்ள இடங்களில் இனியும் இருப்பின் தங்கள் ஆடு மாடுகளுக்கு ஆகாது என்பதறிந்த இடையர், மேட்டுகிலங்களைத் தேடிச்சென்று தங்குவாராயினர்; ஊருக்கு அணித்தே உள்ள இடங்களில் மேய்த்து, ஊரில் தங்கிப் பழகிய அவர்கள், இனி அவ்வாறு செய்வதற்கில்லேயே என்று ஏங்குவாராயினர் ; இவ்வருத்தத்தோடு குளிரின் கொடு மையும் அவர்களே வருத்துவதாயிற்று; பல் பறைகொட்டும் தங்கள் குளிர்போக்க, தீயை எழுப்பிக்கைகளைக் காய்ச்சிச் சூடேறி கைகளைக் கன்னங்களிலே வைத்துக் குளிரைத் தாங்கிக்கொண்டு வேற்றார்களில் வாழலாயினர்; குளிரின் கொடுமையால், விலங்குகள் தங்கள் தொழிலாகிய மேய் தலையும் மறந்து மடியலாயின; குரங்குகள் குளிரால் உடல் குன்றி வருந்தலாயின; மாங்களில் வாழும் பறவைகள் குளிர்காற்ருல் அலைப்புண்டு தரைமிசை வீழ்ந்து துன்புற ல்ாயின; கறவைப்பசுக்கள் குளிர்ன் கொடுமையால், பர்ல் உண்ணவரும் தம் கன்றுகளுக்கும் பால்கொடாமல் உதைக்கலாயின; குன்றுகளும் குளிரால் ஈடுங்கலாயின; அத்தகைய கொடுமை மிக்க கூதிர்க்காலம் என்று கூதிர்காலத்தில், காலமாறுபாட்டால் கொடுந்துன்பம் கொள்ளும் உயிர்களின் இயல்பை உள்ளவாறே உணர்த்து கின்றார். W

' வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிக்தென, ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் எறுடை இன நிரை வேறுபுலம் பாப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீாலேக் கலாவ, மெய்க்கொள் பெரும்பனி கலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ கடுங்க, மா, மேயல் மறப்பு, மக்கி கூா, - பறவை படிவன வீழக், கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் - குன்று குளிர்ப்பன்ன கூதிர். 1: ... (செதில், க-க2)