பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. நக்கீரர் பாராட்டிய அரசர்கள்

ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சியின் அவைக் களப் புலவராகவும், கபிலர், பறம்பிற் கோமான் பாரியின் அவைக்களப் புலவராகவும், பரணர், கடல்பிறக்கோட் டிய வெல்புகழ்க்குட்டுவன் அவைக்களப் புலவராகவும் அமர்ந்து, அவ்வவ்வரசர்களைப் பாராட்டினர்கள் என்ப தைப்போல், நக்கீரர், இன்ன அரசன் அவைக்களத்தே வாழ்ந்தார் என்று கூறுதற்கில்லை. நக்கீரர் பாராட்டைப் பெற்ற அரசர்களுள், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே, முதன்மை பெற்றுளான் எனினும், அவர், அவன் அரசவைசென்று கண்டு பாராட்டி யுள்ளார் எனக் கொள்வதற்கில்லை; அவ்வரசர்களுள் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் ஒருவனேயே, அவர் நேர்கின்று பாராட்டியுள்ளார்; தாம் இருந்து வாழ்ந்த அரசவை என நக்கீரர் கூறுவது, சோழநாட்டுப் பிடஆர்கிழான் பெருஞ்சாத்தன் அரசவை ஒன்றையே; ஏனைய அரசர்கள் எல்லாம், நக்கீரர் பாடலில் இடம்பெறும் பேறுபெற்றவர்களே; அவர் தம் முன்கின்று தம்மைப் பாடிய பேற்றினேப் பெற்றவரல்லர்.

இவ்வாறு, நக்கீரரால் பாராட்டைப் பெற்றவராகவும், அவர் பாக்களில் இடம்பெற்ருே ராகவும் உள்ள அரசர்கள், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், பிட வூர் கிழான் பெருஞ்சாத்தன், பாண்டியன் நெடுஞ்செழியன், கரிகாலன், கிள்ளிவளவன், தித்தன், திதியன், எள்வி, அன்னி, திரையன், பழையன், எருமையூரன், தழும்பன், முசுண்டை முதலியோராவர். -

இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், சங்கப் புலவர்களுள் சிறந்தார் எனப்படும் மதுரை மருதன் இள நாகனர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர், ஆவூர் மூலங்கிழார், வடமவண்ணக்கன் பேரிசாத்தனர் முதலி யோராலும் பாராட்டப் பெற்றுேளுவன்; மக்கள் பலரும்,