பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க் கீ ர்

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், அழுந்துார் வேள்மகள் ஒருத்தியும் அருந்தவம் பல ஆற்றிப் பெற்ற மகனே கரிகாலன்; பிறப்பதற்குச் சின்னுட்களுக்கு முன்னரே, தங்தையை இழத்துவிட்டான் ஆதலின், பிறக் கும் போதே பேரரசு உரிமை பெற்அப் பிறந்தான்் என்ப. இளமையில், காடாட்சியில் நாட்டம் கொண்டி ருந்த தாயத்தால் சிறையுற்றுப் பின்னர்த் தன் வாள் வலியும், அம்மான் இரும்பிடர்த் தலையார் துனேயும் பெற் அப் பகைவர்தம் திண்ணிய காவலை அழித்து வெளிப் போத்தான்்; வெளியேறுங்கால், பகைவர் வைத்த தீயால் கர்ல் வெர்துற்றுக் கருகக் கரிகால் என்ற பெயருடைய யிைனுன் வெளியேறி, விடுதல் பெற்றுத் தன் அரசுரி மையினே அடைந்த பின்னர்ச் சோமான் பெருஞ்சோலா தனும், செழியன் ஒருவினும், பதினெரு வேளிரும் கூடி எதிர்க்க, எதிர்த்தாரைக் கோயில் வெண்ணியில் வெற்றி கொண்டு, தாய் பிறந்த ஊரில் அதுகுறித்து விழாக் கொண் டாடி மகிழ்ந்தான்். மீண்டும் வாகைப்பறந்தலைக்கண் வந்கெதிர்த்த ஒன்பது மன்னர்களின் குடைகளையும் மு: சினேயும் கைக்கொண்டு வென்று துரத்தி வீறு கொண் டான். தமிழ்நாட்டில் ஆங்காங்கே வாழ்ந்து வந்த ஒளி யர், அருவாளர், பொதுவர் போன்ருசையும், கங்கைக் கரை வாழ் பேரரசுகளாகிய, வச்சிரம், மகதம், அவர்கி அர்சர் களையும் தன் ஆணே உணருமாறு செய்தான்். காவிரிக் குக் கரை அமைத்த காட்டுவளம் பெருக்கினுன் ; புகார்ப் பெருந்துறையைப் புதுப்பித்துப் புநாட்டு வர்ணிபத்தை வளர்த்துச் செல்லுகிலையினைச் செழிப்புறச் செய்தான்். கடியலூர் உருத்திரங்கண்ணனும் பாடிய பட்டினப்பாலே கேட்டுப் பதினறு துருயிரம் ப்ொன் பரிசளித்துப் பெருமை கொண்டான். . -

இத்தகைய புே சன் செய்த அரும்பெரும் செயல் ஒன்றை, நக்கீசர் தரம் பாடிய அகாலுாற்றுச் செய்யுள் ஒன்றில் அமைத்துப் பாராட்டியுளார் ; எந்த நாட்டில் செல்வநிலைகண்டு பிறகாட்டு மக்கள் எல்லாம்