பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தனர்; அதனுல், அக் கோசரை அழித்து ஒழித்தல் வேண்டும் என அக்கால அரசர்கள் அனைவரும் முயன் அள்ளனர்; அத்தகைய முயற்சியில் கிள்ளிவளவனுக்கும் பங்குண்டு என்கிருர் நக்கீசர் : வாய்மை வழுவா நெறியால் விள்ங்கும் புகழ்பெற்றுச் செல்வத்தாலும் சிறந்து காணப் பட்ட கோசர்கள், தொல்லேவிளேத்துக் கைப்பற்றிய காடு களே, அவர்களின் பெரும்படையைப் பாழ்செய்து கைப் பற்றக் கிள்ளி விரும்பினுன் என்று நக்கீரர் கூறுகிருர் :

' வாய் மொழி கிலேஇய சேண் விளங்கு கல்லிசை

வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி திலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி.’ (அகம். உ0இ)

பழையன் மாறன் என்பான் ஒருவன், பாண்டியர் படைத்தலைவனுய் விளங்கினுன் , அவன் படைவலி கண்டு பேரரசர் பலரும் அஞ்சி வாழ்ந்தனர்; கிள்ளிவளவன், வெள்ளம் போல் பாக்க பெரும்படையுடன் பழையன் வாழ்க்கிருந்த கூடல் நகரை அடைந்து ஆங்கே, நெடிய பல தேர்களேயும், அணிபல அணிந்து தோன்றும் யானைப் படைகளேயும் உடைய பழையனே எதிர்த்துப் போராடிச் சாய்த்து, பகைமன்னரின் ஊரைக் கைப்பற்றிக் கொணர்க் தான்் , தம் குலப் பகைவனுகிய பழையன் பெற்ற இத் தோல்வி கண்டு சேரகாட்டு அரசன் களித்தான்் என்ற ஒரு வரலாற்றை நக்கீரர் கூறியுள்ளார்;

கெடுந்தேர்

இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூட லாங்கண் வெள்ளத் தான்ேயொடு வேறுபுலத் கிறுத்த் கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் - கடும்பரிப் புவியொடு களிறுபல வவ்வி

ஏதில் மன்னர் ஊர்கொளக் - கோதை மார்பன் உவகையிற் பெரிதே." (அகம். உசசு)

கிள்ளி வளவனைப் பாடிய புலவர் எவரும், அவன் பாண்டி நாட்டை வென்முன் என்று யாண்டும் கூறவில்லை.