பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. நக்கீரரைப்பற்றிக் கூறும் கதைகள்

நக்கீரர் முதலிய சங்கப் புலவர்களின் பிறப்புக் குறிக் தும், அவர்கள் சங்கத்தமர்ந்து தமிழாராய்தற்கு வேண்டிய பலகை பெற்றது குறித்தும், இறைவன் களவியல் இயற் றியது குறித்தும், நக்கீசர்ைக்கும் இறையனர்க்கும் நடை பெற்ற சொற்போர் குறித்தும், நக்ரேர் திருமுருகாற்றுப் படை பாடுகற்கான காரணம் குறித்தும், வேறு பிற குறித் தும் பல நூல்களில், பல கதைகள் பலவாறு கூறப்படு கின்றன. அவற்றைத் தனித்தனியே எடுத்துக் கூறி ஆராய்ந்து உண்மை காண்பது நன்றாம். சங்கப் புலவர்கள் பிறப்பும், அவர்கள் சங்கப் பலகை பெற்றதும், புலவர்கள் எல்லோர்க்கும் பொதுக்கதை ஆதலின் அவற்றை விரித்துக் காணுது வேண்டிய அளவு கண்டு செல்லலாம்.

களவியல் குறித்த கதை, களவியலுரை” என்ற தலைப்பின் கீழ் ஆராயப்படும். ஆகவே, அதை ஈண்டுக் கூற வேண்டுவதில்லை. நக்கீசர்க்கும், இறைவற்கும் நிகழ்ந்த தாகக் கூறப்படும் கதைகளே நக்கீரர் வரலாருேடு நெருங் கிய தொடர்புடையதாதலின் அதைச் சிறிது விரித்து உரைத்தல் கன்றாம், ஆகவே, ஈண்டு கண்டு ஆராயப் பெறுவன, சங்கப் புலவர் பிறப்பு, சங்கப் பலகை பெற்றது, நக்கீரர் - இறைவர் வாதம், அவர், முருகாற்றுப்படை பாடிய வரலாறு ஆகிய இக் கதைகளே. -

புலவர் பிறப்பினைக் குறித்துக் கூறப்படும் கதைகள் பல நூல்களில் வந்துள்ளன. நக்கீரரைப்பற்றியும், அவர் காலப் புலவர்களேப்பற்றியும் கூறும் நூல்கள் பலவாயிலும் அவர்கள் பிறப்புக் குறித்துக் கூறும் நூல்கள் வடமொழி ஆலாஸ்ய மகாத்மியம், அதை முதல் நாலாகக் கொண்டு பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் என்ற இரண்டு மட்டுமே ஆம். கிருவிளையாடல்களுள் காலத்தால் முற்பட்டுப் பழைய திருவிளையாடல் எனப் பெயர் பெறும் பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், புலவர்கள் பிறப்புக்