பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 : ந க் ோர்

குறித்து ஏதும் கூறப்படவில்லை. இனி, கதையினே நோக்குவோம்.

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் கூறும் நக்கீரர் முதலாம் புலவர்களின் பிறப்பு :

பாண்டிய காட்டை வங்கியசேகரன் என்பவன் ஆண்டு வரும் காலத்தில், காசியில், நான்முகன் பத்து அசுவமேத யாகங்கள் செய்து முடித்துவிட்டுக் கங்கையில் நீராட வேண்டித் தம் மன்ே வியாகிய சரசுவதி, சாவித்திரி, காயத்திரி மூவரையும் உடனழைத்துக்கொண்டு சென்ருன்; இடைவழியில், வித்தியாதர மகளொருக்கி பாடிய இன்னிசை கேட்டு மயங்கிய நாமகள் அங்கேயே கின்று விட்டாள். கங்கைக்கரை சேர்ந்த நான்முகன், நாமகள் வாாாமை கண்டு, அவள் இன்றியே ஏனேய இருவருடன் நீராடிக் கரை ஏறினன். அங்கிலையில் ஆங்கு வந்து சேர்ந்த நாமகள், அவர் செயல் கண்டு சினந்து, 'நான் இல்லாத போது நீங்கள் மட்டும் நீராடியது எவ்வாறு? எனக் கேட் டாள்; செய்த குற்றத்தை மறந்து தன்னைப் பழிக்கும் அவளே நான்முகன் நோக்கி, ' குற்றம் கின்னுடையதாகவும் என்னேப் பழித்தனே ஆதலின், இக்குற்றம் நீங்க, நாற்பத் தெட்டுப் பிறவி மக்களாய்ப் பிறந்து மண்மேல் துன்புற்று வாழ்வாயாக,” என்று சாபம் கொடுத்தான்். சாபம் கேட்டஞ்சிய கலைமகள், கணவனே வணங்கி, மானிடப் பிறவியில் பிறந்து பெறும் பெருந்துயரை எவ்வாறு ஆற்றுவேன் சீ,” என அழலாயினள். நான்முகன் அவள் பிழை உணர்ந்து வருந்துவது கண்டு, ' கின் உடல் உறுப் புக்களென விளங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றில் ஆகாரம் முதல் ஹகாம் ஈருக உள்ள நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக, அகர வடிவினனை இறைவனும் ஒரு புலவனுய்த் தோன்றி, அப் புலவர் தமக்கு அறிவூட்டும் ஆசிரியனுகுக,” என்று கூறிச் சாப விடை தந்தான்்.

அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாற்பத்தெட்டு மக்க