பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ந க் கீ ர்

இவ்விடர், இன்று கின்னல் வந்துற்றது” என்று கூறி" வருந்தினர்.

அவர் உரைத்தன கேட்டாக்கீரர், அவர்க்குத்தம்மால் நேர இருக்கும் இடர்போக்க எண்ணி, முருகக் கடவுளின் திருவடித்தாமரைகளே உள்ளத்தே கொண்டு ஆறு எழுத்தோதி திருமுருகாற்றுப்படையினைப் பாடினர். ஆறுமுகக் கடவுள் அவர் முன் தோன்றி, ஆங்கிருந்தாரை அணுகத் தோன்றிய பூதத்தையும், கதையாலடித்துக் கொன்று அவர்கள் அனைவரையும் விடுவித்தார். பின்னர், முருகன், நக்கீரனர் ஆங்கு வந்த காரணத்தைக் கூறக் கேட்டு, இறைவன், கயிலைகாண எனப் பொதுவாகக் கூறினர். வடகயிலையினேயே காணவேண்டும் என்னும் கியதி இல்லை; தென்கயிலையாம் காளத்தியைக் காணினும் இங் நோய் நீங்கும்” என்று எண்ணி, நக்கீரரை கோக்கி, இப் பொய்கையில் மூழ்கினுல் கயிலையைக் காண்பை” எனக்கூறி மறைந்தார். அவரும் அவர் ஆணேமேற்கொண்டு அக்குளத்தில் மூழ்கி எழுந்தார்; எழுந்து நோக்கியவழி, தாம் கிற்கும் இடம் தென் கயிலையாகிய காளத்தி நகராதல் அறிந்தார்; கயிலையும், காளத்தியும் ஒன்று என உணர்த்திய அறுமுகப்பெருமான் கி ரு வ டிக ளே ப் போற்றினர்; பின்னர்க் கயிலைநாதனையும், காளத்திநாதனேயும் மாறி மாறி வணங்குவோராய்க் கயில்ைபாதி, காளத்திபாதி அந்தாதி ' பாடிப்பரவினர். தம் உடற்பிணி போக்கிய வாறே, உயிர்ப்பிணியும் போக்கி ஆட்கொள்ளுமாறு ஆண்டவனே வேண்டி, வேண்டியவாறே அவர் திருவடி நிழலில் கலந்தருளினர். - -

திருப்பாங்கிரிப் புராண நக்கீரர் சருக்கம், நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய சூழ்நிலை குறித்து, காளத்தி புராணத்தில் காணப்பட்ட முறையோடு மாறுபட்ட ஒரு கதையினேக் கூறுகிறது; அது கூறுமாறு : - நக்கீசர், நாள்தோறும் திருப்பரங்குன்றம் சென்று, ஆங்குள்ள சரவணப் பொய்கையில் நீராடிப் பூசை முடித் துச் செல்வது வழக்கம். நக்கீரர், கடவுளரில் சிவனேயும்,