பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீாரைப்பற்றிக் கூறும் கதைகள் 59

திருவிளையாடற் புராணமுடையார், தாய் தந்தை யரை இளம்பருவத்தே இழந்த தருமி மணம் கொளற்கு வேண்டும் பொருள் வேண்டி இறைவனே இரந்தான்் என்றார்; காளத்திப் புராணமுடையார், பாண்டி காட்டில் பஞ்சம் தோன்ற வறுமையால் வாடி வேறு நாடு போதற்கு எண்ணித் தன்பால் விடை கேட்க வந்த தருமிக்கு இறை வனே செய்யுள் இயற்றித் தந்தார் என்று கூறுகிரு.ர்.

திருவிளையாடற் புராணமுடையார், செய்யுள் பெற்ற தருமி, அதை முதலில் புலவர்க்குக்காட்ட, அவர்கள் வியந்து அரசனுக்கு உரைப்ப, அவனும் மகிழ்ந்து தரு மியைப், பொற்கிழி பெற்றுச்செல்க' எனப்பணிப்ப, அவ்வாறே அவனும் போந்து கிழியினே அறுக்கப் புகுங் கால் நக்கீரர் மறுத்தார் என்றார் ; காளத்திப்புராண முடையார் செய்யுளைப் பெற்ற தருமி, முதலில் பாண்டிய னிடம் சென்று காட்ட அவனுவந்து, புலவர்கள் பாராட் டையும் பெற்றுவருக, என்ன, அவ்வாறே அவனும் புலவர்க்குக் காட்டியவழி நக்கீரர் குற்றம் கண்டார்,' என்று கூறுகிருர்.

திருவிளையாடற் புராணமுடையார், இறைவன், <<虏f வழிபடும் ஞானப்பூங்கோதையர் கூந்தலும் அத்தகை யதோ?’ என்றார் என்று கூறுகிருர். காளத்திப் புராண முடையார், வாளா, இறைவி கூந்தலும் அத்தகைத்தோ? என்றார் என்று கூறுகிரு.ர். -

திருவிளையாடற் புராணமுடையார், இறைவன் திறந்த துதல்விழி வெப்பம் பொருது நக்கீரனர் பொற்ருமரைக் குளத்தில் விழுந்தார் என்றார் ; காளத்திப் புராணமுடை யார், இறைவன் நக்கீரனரைக், குட்ட நோய் கொள்க’ என, அதற்கு அஞ்சித் தொழுத நக்கீரனரைக் கயிலை காணின் இது தீரும், என்று கூறி மறைந்தார் என்றார்,

காளத்திப் புராணம் உடையார், நக்கீசர், தம் நோய் திரக் கயிலை நோக்கிச் சென்ற போது இடைவழியில் ஒரு குளக்கரையில் பூதத்தால் சிறைப்பட்டு, ஆங்குத் தமக்கு