பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ந க் ரே ர்

முன் அடையுண்டிருந்தாரைக் காத்தற்குத் திருமுரு காற்றுப்படை பாடினர் என்றார் ; பாங்கிரிப் புராண முடையார், தன் பாங்குன்றில் ரோடித் தன்னை வணங்காது செல்லும் நக்கீரனரின் பாராட்டைப்பெற வேண்டிய முருகன், பரங்குன்றில் சிறை செய்தவழி நக்கீரனர் பாடினர் திருமுருகாற்றுப்படை என்று கூறுகிருர்,

காளத்திப் புராணம், முருகன் மீது நக்கீரர் பாடிய பாட்டாகக் கிருமுருகாற்றுப்படை ஒன்றை மட்டுமே குறிப்பிடுகிறது; பரங்கிரிப் புராணம், கிருமுருகாற்றுப் படையோடு, ' குன்ற மெறிந்தாய்' என்ற வெண் பாவையும் நக்கீரனர் பாடினர் என்று கூறுகிறது.

பரஞ்சோதியார் திருவிளையாடல், நக்கீரர் இயற்றிய வேறு பிரபந்தங்கள் என்ற வரிசையில், கயிலைபாதி காளத்திபாதியந்தாதி, கோபப்பிரசாதம், பெருந்தேவ பாணி, திருவெழு கூற்றிருக்கை என்னும் நான்கு நூலையும் சுட்டுகிறது; நம்பி திருவிளையாடல் அந்தாதியை மட்டும் சுட்டுகிறது. - :

நக்கீரர்முதலாம் புலவர்களின் பிறப்பு, அவர்கள் சங்கப் பலகைபெற்றது ஆகிய நிகழ்ச்சிகளைக் கூறும் போதும் அந்நூல்கள் பெரிதும் மாறுபடக் காண்கிருேம் பழைய திருவிளையாடல் எனப்படும் நம்பி திருவிளை டாடலில் சங்கப்புலவர்களின் முற்பிறப்புக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை ; சங்கப்புலவர்களோடு பழைய புலவர் பலர் வாதம் புரிந்தனர்; அகனல் மனம் தளர்ந்தே லவர்கள் பலகை வேண்டினர் என்னும் செய்தியும் நம்பி திருவிளையாடலில் காணப்படவில்லை; எழுத்துக்கள் நாமக ளின் உடற்கூறுகளின் அம்சமாம் என்றும், அவ்வெழுத் துக்களே புலவர்களாய்ப் பிறந்தன என்றும் கூறப்படும் புலவர்களின் முற்பிறப்பு வரலாறு வடமொழி ஆலாஸ்ய மகாத்மியத்திலும், அதை முதல் நூலாகத் கொண்ட பஞ் சோதியார் திருவிளேயாடற் புராணத்திலும் மட்டுமே

கூறப்பட்டுள்ளன. х