பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீமர் இயற்றிய நூல்கள் 63

அவர் வரலாறு, அவர் பாராட்டிய அரசர்கள், அவர் காலம் ஆகியவை ஆராயப்பட்டன. அன்றியும், அப் பாக்களே. மீண்டும் எடுத்து ஆராய்தல் தேவை இல்லை ஆதலின், அவை பற்றிய ஆராய்ச்சியினையும் விடுத்து, நக்கீசர் இயற்றிய நூல்கள் எனப் பதினோங் கிருமுறையில் வருவனவற்றையும், பிற தனிப்பாடல்களையும் ஆராய்ந்து நோக்குவோமாக.

அவை பற்றிய ஆராய்ச்சியினே மேற்கொள்வதற்கு முன், அந் நால்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல் நன்றாம்.

(க) கைலைபாதி காளத்திபாதி யந்தாதி -கைலே நோக்கிச் சென்ற நக்கீசர், இடைவழியில் முருகன் அருள் பெற்று, அவர் ஆணையால் ஆண்டுள்ளதோர் பொய்கையில் மூழ்கி, காளத்தி நகரில் உள்ள பொன்முகரியில் எழுந்து, கைலேயும் காளத்தியும் ஒன்றென உணர்ந்து அவ்விரு இடங்களிலும் அமர்ந்த பெருமானே மாறிமாறிப் பாடியது என இதன் வரலாறு கூறுவர். நூறு நேரிசை வெண்பாக் களைக் கொண்டது. இறுதிப் பாட்டின் இறுதிச் சீர், முதற் பாட்டின் முதற் சீராகக் கொண்டு வருவது. -

(உ) திருவீங்கோய்மலை எழுபது :-சோழநாட்டில்

உள்ள தேவாரம் பெற்ற திருப்பதிகளில் ஈங்கோய்மலை என்பதும் ஒன்று ; ஈங்கோய்மலை சிவபிரான் விரும்பி உறையும் மலை- ஈங்கோயே, பூமயிலி தாதை பொருப்பு' என்ற பொருளமைத்துப் பாடிய எழுபது கேரிசை வெண் பாக்களால் ஆகிய ஒரு நூல் இது குறிஞ்சி கிலத்தின் இயல்புகளைக் குறைவறக் கூறுவது. .

(ட) திருவலஞ்சுழி மும்மணிக் கோவை -சோழ நாட்டுத் தேவாரம் பெற்ற திருப்பதிகளில் திருவலஞ் சுழியும் ஒன்று. மூவேறு மணிகளே முறை முறையாகக் கோத்தாற்போல் ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூவகைப் பாக்களாலும் முறைப்படப் பாடப்பட்ட பதினேந்து செய்யுட்களைக் கொண்டதொரு சிறு நூல். அவ்வூர் ஈசன் மீது அன்பு கொண்டு பாடிய பாடல்கள்.