பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பிறப்பு, குலம், சமயம்

தமிழ் வளர்த்த புலவர்களுள் பலர் தம் வரலாறு அறி யப் பெறுவதில்லை; இயற்பெயர் தாமும் அறியப்பெருப் புலவர்களும் உளர்; அத்தகைய குறைபாடு, நக்கீரர் பால் இல்லை; அவர் பெயர், மதுரைக்கணக்காயனர் மகனர் நக்கீர னர் என அழைக்கப் பெறுவதினலேயே, அவர் மதுரையில் பிறந்தவர்; கணக்காயனர் என்பார்தம் அருமை மகளுர்; நக்கீரனர் என்ற இயற்பெயருடையார் என்ற வரலாறுகள் உணர நிற்கும் பேறு நக்கீார்க்கு உண்டு.

மதுரை, தமிழ்வளர்த்த பெருமை உடையது; கூட வின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்” எனப் போற்றுவர் மணிவாச கப் பெருந்தகையார்; தமிழகத்தின் புலவரெல்லாம் தன் பால் வந்துகூடித் தமிழாய்ந்த பெருமையுடையது; அதுவே யன்றி, ஐம்பதின்மர்க்கு மேற்பட்ட புலவர்களின் பிறப் பிடமாகவும், வாழ்விடமாகவும் விளங்கிய பெருமையுடை யது; புலவர்கள் தமிழ்வளர்க்கப் பேரவை அமைத்துப் பெருந்துணைபுரிந்த பாண்டிய மன்னர்களின் தலைநகராம் தகுதியும் மதுரைக்கே உண்டு. -

இத்தகைய மாண்புமிக்க மதுரை மாநகரில், கணக்கா யர் ஒருவர் இருந்தார்; இந்நகர், கணக்காயர் பலர் வாழத் தக்க மாபெரும் நகரமாகும். ஆதலின், ஆங்கே, கணக்கா யர் பலர் வாழ்ந்திருப்பர். எனினும் அவர்களுள் நக்கீரன ரின் அருமைத் தந்தையார் பெரும்புக்ழ் பெற்று விளங். கிய காரணத்தால், மதுரைக் கணக்காயனர் என்ற சிறப் பினே அவர் ஒருவரே பெற்று விளங்கினர்; தமிழ்எழுத்துக் களைத் தமிழ்க்கணக்கு, தமிழ்நெடுங்கணக்கு எனப் பெய ரிட்டு அழைப்பர்; இளஞ்சிருர்கட்கு எழுத்துக்களைக் கற் பிக்கும் ஆசிரியரைக் கணக்காயர் என அழைப்பது வழக். கம்; அதல்ை, நக்கீரனரின் தந்தையார், தமிழ்எழுத்துக் களப் பயிற்றுவிக்கும் வர் என்பர் சிலர்; ஆனால்,

கணக்கு என்பத,