பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் உரை 75

பழைய திருவிளையாடல், ' புலவர்கள், தாங்கள் அவ்வப்போது பாடிவிட்டுச்சென்ற பாடல்கள் பலவாய்ப் பெருகியதைக் கண்டு அவற்றை அவற்றின் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்த விரும்பினர் ; ஆனால், அதை அவர்களால் ஆற்ற முடியவில்லை; தங்கள் ஆற்ருமை கண்டு மனம் சொந்து இருந்த புலவர்கள் முன்னே ஆலவாய்ப்பெருமான் ஒரு புலவராய் வந்து அப் பாடல்களே ஆராய்ந்து ஒழுங்கு படுத்திக் கொடுத்தார் ; புலவர்கள், புதுப்புலவர் செர்க்கர் போலும் எனக் கருதிப் போற்றி வணங்கினர்; அவரும், அவர்களுடன் ஒருவராய் இருந்து தமிழாராய்ந்து வாழ் வாராயினர்.

“ஒருநாள், புலவர்கள் பொருள் இலக்கணப் பொரு ளறியமாட்டாது மயங்கியிருந்தாராக, புதுப்புலவர் அன் பின் ஐந்திணை என்று தொடங்கி அறுபது சூத்திரங் களேக் கொண்ட அகப்பொருள் நூலை ஆக்கி அவர்களிடம் தந்தார் ; புலவர்களெல்லாம், அப் பொருள் இலக்கணத் தோடு பொருந்த கிற்கும் தத்தம் செய்யுட்களைக் கண்டு, அவர் நூலைப் போற்றிப்புகழ்வாராக, நக்கீரர் பொருமை உடைாய், ' என்பாக்களுள் ஐந்தாம் பாட்டுக்கு ஒப் பான பாடல், உங்கள் பாடல்களுள் ஒன்றுமே இல்லை.” என்று கூறுவாராயினர்; அது கேட்ட புதுப்புலவர், ' போவைக்கண்கின்று இவ்வாறு தன்னே வியந்து கூறும் ஒருவன் பெரும்புலவகைான் ’ என்று கூறி நக்கீரர் செருக் கையும் அழிக்க எண்ணி அரும்பொருள் அமைந்த அழகிய பாட்டொன்றைப் பாடிக்காட்டிப் புலவர்களே! இதற்குப் பொருள் கூறுங்கள்’ எனக்கூறி கின்றார்; புலவர்கள் எவரும் ஏதும் கூறினால்லர்; ஆனல் நக்கீசர் மட்டும் 'பாட்டுப் பிழையுடையது” என்றார், இறைவன், இவன் பொருமை உடையவன்; ஆதலின், இவன் குற்றம் என்றால் என் கவி குற்றமுடையதாகிவிடாது ; நீங்கள் யாரேனும் கூறுங்கள். என் கவி குற்றமுடையதா?’ என்று கேட்டு கின்றார். புலவர்கள் வாய் திறவாது வாளா இருந்தனர். அங்கிலையில், 'உங்கள் வழக்கைத்தீர்க்க இறைவனே புதுப்