பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் உரை 79

காலத்திற்கு ஐந்து நூற்ருண்டு பிற்பட்ட நிகழ்ச்சிகளே அவ் வுரை அறிவிக்கிறது என்பதால் கால முரண்பாடும் காணப்படுதலாலும், அவ் வுரையாசிரியரின் வேறுபட்டவர் நக்கீரர் எனத் தோன்றுமாறு அவ்வுரை இருக்கின்றது ஆதலாலும், ! உப்பூரிகுடிகிழார் மகனவான் உருத்திர சன்மன் செய்தது இந் நூற்கு உரை என்பாரும் உளர் ; அவர் செய்கிலர் ; மெய்யுரை கேட்டார் என்க” என்று எழுதி அவ் வுரை எழுதப்பெற்ற அக் காலத்திலேயே அங் நூலுரையாசிரியர் நக்கீரர் ஆகார் என்ற கருத்தும் கிலவி யிருந்தது என்பதை, அவ் வுரையே உறுதி செய்கிறது. ஆதலாலும், களவியலுக்கு உரை கண்டார் நக்கீரனரே என்பதை ஏற்றுக்கொள்வதில் சிறிது ஐயப்பாடும் கொள்ள வேண்டியுளது.

எழுதினர் யாரேயாயினும் களவியல் உரை, தமிழக வரலாற்றினுக்குத் துணைபுரிந்து தமிழ்மொழிக்குச் சிறப் பளிக்கும் தனிப் பேருரையாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழ் வளர்த்த சங்கங்கள் மூன்றின் வரலாற்றினே, விளக்கமாகவும், விரிவாகவும் முதல் முதல் அறிவித்த பெருமை, களவியல் உரைக்கே உரித்து. அது அறிவிக்கும் முச் சங்க வரலாறு இது : ---

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினர் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியருைம், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார். ஐஞ்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப; அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பக் தொன்பதின்மர் பாடினரென்ப. அவர்களாற் பாடப்பட்டன . எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், ! களரியாவிரையுமென இத் தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தா ரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினர், காய்சினவழுதி

முதலாகக் கடுங்கோன் ஈருக எண்பத்தொன்பதின்மர்