பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - ப ன ர்

என்று வினவ, அதற்கு விடையளிபாதே வெளியேறினன்: பின்னர் வழிவந்தோல், அவள் நள்ளி என்பதறிந்த புலவர் அவனே உள்ளத்தாலும், உரையாலும் பாராட்டினர். - இத்தகைய பெருவள்ளலாம் நள்ளியின் சிறப்பையும், அவன்வீரர்தம் வில்லாற்றலையும், காடு செறிந்த அவன் மலேயின் காந்தள்மலரின் கடவுள்குடும் கவின்மிகு மனத் தையும் பரணர் பாராட்டியுள்ளார்.

வல்வில் இளையர் பெருமகன் நள்ளி, சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த கட்வுட் காந்தள்.” - (அகம். கடுஉ)

(10) வல்வில் ஒரி:

கடையெழு வள்ளல்களுள் ஒரியும் ஒருவன் ; விற். போரில் வல்லய்ை, வல்வில் ஒரி எனப் பாராட்டப் பெறுவன் ; இவன் வில்லாற்றல் குறித்து வன்பரனர் கூறிய விளக்கம் வியத்தகு சிறப்புடையதாம். ஒரியின் கைவில்லினின்றும் புறப்பட்டு விரைந்து சென்ற அம்பு, தொடக்கத்தில் வேழத்தை வீழ்த்திப் பின்னர் புலியின் உயிரைப்போக்கி, மானே மாளச்செய்து, பன்றியின் உயிரைப்பறித்து இறுதியில் புற்றில் அடங்கியிருக்கும் உடும்பின் உடலிற்சென்று தைத்து சிற்கும் என்று வரிசை, யாகக் கூறுவர். மேற்குத்தொடர்ச்சிமலையைச் சேர்ந்த கொல்லிமலே இவனுக்குரியது; அம்மலேயில் அழகே உரு, வெனத் திரண்ட பாவையொன்றுண்டு. அவன் நாட்டு மக்கள், உழுதொழில்தவறி உணவின்றி வருந்தும் காலத்தில், காட்டில் பானேகளைக்கொன்று, அவற்றின் கொம்புகளே விலையாகக்கொடுத்து உணவுபெற்று உண்பர். ஒரி, காரியோடு போரிட்டு இறந்தான்் ; அதன்பின், அவன் கொல்லிமலையும், காரியின் நண்பராம் சோவேக் தர்க்கு உரிமை உடையதாயிற்று; ஒரியைக் கொன்ற காரி, அக்கொல்லி நகரில், வெற்றி விழர்க் கொண்டாடி, அங். நகர்த் தெருக்கள் வழியாக் ஊர்வலம் வந்தான்் என்ப.