பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 95.

ரி, மாரிபோல் வழங்கும் மாபெரும் வள்ளல்; அவன் கொல்லிமலை, பழம்பல கொண்ட பலாமரங்களால் கிறைந்தது ; திண்ணிய தேர் ஏறித்திரியும் ஒரியின் காடு, மணம் மிக்க மலர்களால் சிறந்தது ; அவற்றின் நாற்றம், நாற்புறமும் சென்று நலம்பெறும் எனப்பாணர் கி.துவா,

மாரி வண்மகள் ஒரிக் கொல்லி' (நற்: உண்டு)

' ஒளி, பல்பழப் பலவின் பயங் கெழு கொல்லி'

(அகம் உ0அ) 'திண்தேர்

கைவள் ஒரி கானம் தீண்டி எறிவளி கமழும் கூந்தல் ?? (குறுங் : கக்க) ' வல்வில் ஒரி கானம் நாறி ? - (நற் சு)

(11) கரிகாலன் :

கரிகாலன், உருவப்பஃதேர் இளஞ்சேட் சென்னியின் அருமைத் திருமகனுவன் ; அவன் தாய், அழுந்துார் வேள் பெற்ற மகள்: அவன் மனேவி, நாங்கூர் வேள்பெற்ற மகள்;" அவன் மகள், ஆட்டனத்தியின் அருமை மனேவியார் பெரும்புலவர் மணியாம் ஆதிமந்தியார். அவன் அம்மான் இரும்பிடர்த்தலையார்; கரிகாலன் பிறப்பதற்குச் சின்னுட்கு முன்னரே, தந்தை விண்ணுலகெய்தின்ை ; நாடாட்சியில் காட்டம் கொண்டிருந்த, அவன் தாயத்தார், பிறந்து கடிகிளேயணுய கரிகாலனேக் கடுஞ்சிறையில் இட்டனர்; சின்னுள் சிறையகத்தேவாழ்ந்து, பின்னர்த் தன் வாட் டுனே கொண்டு வெளியேறி விடுதலே பெற்றுத் தனக்குரிய அரசுரிமையைக் கைப்பற்றிக் கொண்டான்.

பின்னர், நீடாமங்கலத்திற்கு அண்மையில், கோயில் வெள்ளி என இப்போது வழங்கும் வெண்ணிவாயில் என்னுமிடத்தே, தன்னை எதிர்த்த, சேரமான் பெருஞ்: சேரலாதன், பாண்டியன் ஒருவன், வேளிர் பதினுெருவர்.