பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 جيته من بعr -

சேர்ந்தவர் என்பதை, யானே, பரிசிலன்; மன்னும் அந்தணன் ' என்னும் அவர் பாட்டும், ' புலனழுக்கற்ற அந்தணுண் ண் என்னும் பிறர் பாட்டும் அறிவிப்பதைப் போல், பரணர் பாட்டோ, அல்லது அவர்காலப் புலவரி பாக்களோ பாணர்குலம் யாது என்பதை எடுத்து இயம்ப வில்லை. ஆனால், பாணர், பேகனைப் பாராட்டிப் பாடிய பக் களில், சீறியாழ் செவ்வழி பண்ணி பாழகின், காரெதிர் கானம் பாடினேம் ' எனவும், களங்கரி யன்ன கருங் கோட்டுச் சீறியாழ், கயம்புரிந் துறையுனர் டுங்கப் பண்ணி” எனவும், சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவனப் பாராட்டிய பாட்டில், அரிக்குரல் தடாரி, உருப்ப ஒற்றிப் பாடி வந்திசின் பெரும !’ எனவும் பாடியிருப்பதைக் கொண்டு, பரணர், பாணர் குடியிற் பிறந்தவர். பாணர் குடியிலே பிறந்து, புலமையாலும், புகழாலும் பலரும் போற்ற வாழ்ந்த காானத்தால், அக்கால மக்கள், அவகை இயற்பெயரிட்டு அழைக்க அஞ்சி, குலப்பெயரால் பாணர் என அழைத்தனர்; அதனுல், அவர் இயற்பெயர் மறைந்து போக, குலப்பெயரே கின்று விளங்கலாயிற்.அ. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்் எழுதினவன் எட்டைக் கெடுத் தான்், என்பதுபோல், பாணர் என்ற இவர் பெயர், பிற் காலத்தில், எடுஎழுதினுேசால், ப'விற்குப்பின் நெடில் குறிக்கவருங் கால் என அழைக்கப்பெறும் என்ற் வடிவம், ர என மாற்றப்பெற்று, பாணர், பரணர் என எழுதப்பட்டு விட்டது; அன்அமுதல் அவர் பரணர் என்றே அழைக்கப் பெற்ருர்; உண்மையில் அவர் பாணர் என்பதே; அவர் குலம் பாண்குலமே ; இயற்பெயர் மறைய சிறப்புக் குறித்து வழங்கிய குலப்பெயரே விளங்க வாழ்ந்த புலவரும் உளர் ; சேக்கிழார், குயத்தியார் என்பன காண்க. ஏஎேழுது வோரால், கால், ரகரமாக மாற்றப்படுவதேபோல், ரகரம், காலாக மாற்றப்படுவதும் உண்டு. சரகம் என்றசொல், தேனீ எனப்பொருள்படும்; இச்சொல்லில் உள்ள ரகரம், காலாக மாற்றப்பட்டுவிட்டமையால், அச்சொல் சாகம் என ஆகி, சூடாமணி கிகண்டிலும் இடம்பெற்றுவிட்டது

காண்க,” என்று சிலர் கூறுவர். -