பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 9

பழந்தமிழ்க் குடிகளில் பாணர்குடி என்பதும் ஒன்று. பாணன், பறையன், துடியன், கடம்பன் என்று இந் நான்கல்லது குடியு மில்லை என்பது புறநானூறு. பாணர்குடியில் பிறந்த ஆண்மகன், பாண்மகன் அல்லது பாணன் என்றும், பெண்மகள் விறலி எனவும் அழைக்கப் பெறுவர். பாண்மகன் பல்வேறு இசைக் கருவிகளோடும் சென்று, அவற்றினின்றும் எழும் இசைக்கேற்ப, தன் இன் குரல் எடுத்துப் பாடிப் பாராளும் மன்னர்க யும், ஊராளும் தலைவர்களேயும் கண்டு பரிசில் பெற்று வருவன். விறலியர், அவ்வாடவர் பாடும் பாடற்பொருளும், தாமே பாடும் பாடற்பொருளும் தெளிவாகத் தோன்று மாறு, கையாலும் கண்ணுலும் நடித்து ஆடி, அத்தலைவர் களை மகிழ்வித்துப் பொருள் பெற்று மீள்வர்; அரசர்கள், அவர் பாடல் கேட்டு மகிழ்ந்து, பாணனுக்குத் தம் பகை வர் யானையின் முகபடாம் அழித்துச் செய்த பொற்ரும ரைப்பூவையும், விறலியர்க்குப் பொற்ருெடியையும் பரிசி லாக அளித்துச் சிறப்புச் செய்வர். இதுவேயன்றி, தலைவன் தலைவியர்க்கிடையே தோன்றும் ஊடல் தீர்த்து ஒற்றுமை உண்டாக்குவதாகிய அப்பணியினையும் அப் பாணர் மேற்கொண்டிருந்தனர் எனப் புலவர்கள் பாடல் புனேவர்.

புலவர்கள் அரசரைப் பாடிப் பரிசில்பெறும் வழக்கம் கோன்றிய அந்தக் காலத்திலேயே, புலவர்கள் எக்குடிப் பிறந்தாராயினும், தங்களைப் பாணராகக்கொண்டு, பாணன் ஒருவன், அரசன் ஒருவனிடத்தில் சென்று, இசையெழுப் பிப் பாடுவதைப் போல் பாடல் புனேவதையே கவி மரபாகக் கொண்டுவிட்டனர். உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார் என்ற புலவர் அந்தணர் குலத்தார் என்பர், தொல் காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரை வகுத்துள்ள பேராசிரியர், அம்முடமோசியார், ஆய் என்ற அரசனைப் பாடிய பாட்டொன்றில், விறலி பின்வரச் சென்று யாழ் இசைத்துப் பாடியதாகப் பாடியுள்ளார் : வளேக்கை விறலி என் பின்னளாக........படுமலே கின்ற பயங்கெழு