பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ட இr i. சீறியாழ், ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைக் கழிஇப், புகழ் சால் சிறப்பின் கின் நல்லிசை உள்ளி வந்தனென்.” கிழார் என்ற குடிப்பெயர், வேளாளர்க்கு உரியது என்பர்; அக்குடியிற் பிறந்து சிறந்தமையால், பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் என அழைக்கப்பெறுவதும் காண்க, கிழார் என்ற சிறப்புப் பெயர்பெற்று, வேளாளர் என அறியப் பெற்ற அரிசில் கிழார் என்ற புலவர், பேகனைப்பாடிய பாட் டான்றில், பாணரைப்போல் யாழ் இசைத்துப் பாடியதா கப் பாடியுள்ளார்: "சீறியாழ்செவ்வழி பண்ணி சின்வன் புல நன்னுடுபாட என்னே சயந்து. பார்ப்பனருள் ஒரு பிரிவின ாகிய கீரன் என்ற குடியிற் பிறந்தவர் எனக் கூறப் பெறும், கனக்காயர் தொழில் மேற்கொண்ட நக்கீசர், சோழ நாட்டுப் பிடஆர்கிழான் பெருஞ்சாத்தனப் பாடிய ஒரு பாட்டில், தடாரிப் பறை முழக்கிப் பாடிகின்றதாகப் பாடியுள்ளார் : அரிக்குரல் தடாரியோடு ஆங்குகின்ற எற்கண்டு.’ இவ்வாறு தம்மைப் பாணாகக் கொண்டு பாடுவதோடு, தங்களே வேறு பாணர் சிலர், பரிசில்பெறும் இடம் யாண்டுளது எனக் கேட்பது போலவும், அதற்கு விடையளிப்போராக, பரிசில்அளிப்போன், அவன் அன்பு, அருள், ஆற்றல், அவன் தமக்கு அளித்த பரிசில் பொரு ன் பெருமை, அவன் நாடு, அங்காட்டு வளம், அவன் நாடு அடைதற்குச் செல்லும் வழிகளின் வகையும், அருமையும் ஆகியவற்றை விளங்க அறிவிப்பார் போலவும் பாடுவதை யும் புலவர்கள் கவிமரபாகக் கொண்டுள்ளனர். இதனை ஆற்றுப்படுத்தல் என்பர். பத்துப்பாட்டில் உள்ள பெரும் பாலான பாடல்கள் அவ்வாறு வந்த ஆற்றுப்பட்ைப் பாடல்களே. அதனல், பத்துப்பாட்டிற்கு ஆற்றுப்படைப் பாடல்கள் என்ற ஒரு பெயரும் வழங்குகிறது. ஆகவே, அவர் பாட்டில் காணப்பெறும், இவைபோன்ற சிகழ்ச்சி களைக் கொண்டு, பாணரைப் பாணர்குடியிற் பிறந்தாாகக் கொள்ளுதல் கூடாது. பாணர், பானர் குடியிற் பிறந்தார் அல்லர் எனவே, அவர் பெயர் பாணர் என்பதே; அது ஏடு எழுதியோரால் பாணர் எனத் திருத்தப்பட்டு விட்டது,” என்பதும் பொருந்தாது. .