பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 11.

பாணர் பெயர், பரணர் என்பதே; பாணர் என்பது அன்று என்பதற்கு ஆதாரமாக அழகிய அகச்சான்று ஒன்றும் கிடைத்துளது. ஒளவையார் பாணர் காலப் புலவர்; அவர், அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டிய பாட்டொன்றில், அதியமான், பாணராலும் பாராட்டப்பெற்ற பெருமையுடையான் எனக் கூறுவர்.

  • பாண்ன் பாடினன் மற்கொல்; மற்றுே

முரண்மிகு கோவலூர் நூறிகின் அரணடு திகிரி எந்திய தோளே.” (புறம், க.க).

இப்பாட்டில், முரண்மிகு, அானடு என்ற சொற்களுக் கேற்ப, எதுகைத் தொடையாகப் பரணன் என்பதே பொருந்துவதாக உளது; பாணன் என்பது பொருத்தாமை அறிக. நக்கீரர் பாடியது என்ற ஒரு பாட்டு தொல்காப் பியப் பொருளதிகார உமையின் மேற்கோளாகக் காட்டப் பட்டுளது; அதன் முதல் இரண்டு அடிகள்

முரனில் பொதியின் முதற் புத்தேள் வாழி பான கபிலரும் வாழி - அரணியல்’

(தொல், பொருள் . சக மேற்கோள்).

என வரும் இதிலும், முரணில், அரணியல் என்பனவற். றிற்கு ஏற்ப பாணர் என்பதே பொருந்துவது அறிக. ஆகவே, பரணர் பெயராலோ, அல்லது பாட்டாலோ பாணர் ஆகார் ; அவர் இயற்பெயரும் பாணர் என்பதன்று; பரணர் என்பதே என்பது முடிவாகக் கொள்க. இதனல், அவர் பாண்குடியினர் என்பதும் பொருந்தாமை அறிக.

(8) சமயம் :-சங்ககாலத் தமிழரிடையே ச்மயப் பூசல் இடம்பெறவில்லை. சங்ககாலத்தார் சாதி சமயச் சண்டைகளைக் கண்டவரல்லர் ; எம்மதமும் சம்மதம்” என்ற உயர்நோக்குடையவர் அவர் ; யாதும் ஊரே ; யாவரும் கேளிர் என்ற பொதுரோக்கு அவர்பால் இருங் தது; தங்கை ஒருசமயம் ; மகன் மற்றொரு சமயம் ; அண்ணன் ஒருசமயம்; தம்பி இன்னுெருசமயம்; கணவன்