பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையிலை

நாட்டைச் சேர்ந்தோராதலும் கூடும் என்று எண்ணுவர் சிலர்; ஆனால், அவர் அவனைப் பாராட்டிய பாடல்களில், காடும் மலையும் கலந்து கடத்தற்கரிய வழி பல கடந்து சென்றே கண்டதாகவும், செங்குட்டுவனைக் காண யான் செல்கின்றேன் ; நீங்களும் வாருங்கள்’ எனத் தம்மை யொத்த புலவர் முதலாயினரை அழைப்பதாகவும் பாடி யுள்ளார். 'மழை பெயல் மாறிய கழைதிரங்கு அத்தம், ஒன்றிரண்டல, பல கழிந்து, திண்தேர் வசையில் நெடுங் தகை காண்கு வந்திசின்; ‘யாமும் சேறுகம் ; யிேரும் வம்மின்; ஆதலின், பாணர் சேரநாட்டார். அல்லர் ; வேற்று நாட்டினரே என்பது முடிபாகக் கொள்க.

'இரு வேறு உலகத் தியற்கை : திரு வேறு ; தெள் ளியாதலும் வேறு’ என்பர் ; செல்வமும் கல்வியும் சோப் பெற்ருேர் உலகத்து அரியர் ; உலகப் பெரும் புல வர் அனைவரும் வறியராகவே வாழ்ந்துள்ளனர்; அவர்கள் வறுமை வாழ்வில்தான்், அறிவு ஒளிவிட்டு விளங்கும் போலும் செல்வம் இல்வழியே, உள்ளொளி பெருகும் போலும் இவ் வியல்பு தமிழ்ப்புலவர்களிடையேயும் இருக்கக் காண்கிருேம். பரணர், பெருஞ் செல்வம் பெற் அறுப் பெருமை தோன்ற வாழ்ந்தவரல்லர் ; பொறுத்தற் கரிய பசித் தயர் வாழ்க்கையில் போராடி வந்தவரே ஆவர். பேகனைக் கண்டு பாராட்டி, அவன் அளித்த பரிசில் பெற்று, கடும் பரி பூட்டிய நெடுந்தேர் ஏறி வருபவர், இடைவழியில் எதிர்ப்பட்ட இரவலன் ஒருவனே நோக்கி, "இரவல! இப்போதைய என் செல்வநிலை கண்டு வியந்து நோக்கி, விேர் யாவிர்! உங்களுக்கு இவ் வாழ்வு எவ்வாறு உண்டாயிற்று' எனக் கேட்கின்றன ; இது, பேகன் அளித்த பரிசில்; அவனேக் காணுமுன், என் கிலே, உன் கிலேயினும் மிக மிக இழிவுடையதாகவே இருந்தது ;

'காரென் ஒக்கல் கடும்பசி இரவல!

வென் வேல் அண்ணல் காணு ஊங்கே, நின்னினும் புல்லியேம் மன்னே இனியே, இன்னேம் ஆயினேம்.”