பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நிலை 丑7

களும் (Geography), நாட்டின் அரசியல் நிலைகளை விளக் கும்வரலாற்று நால்களும் (History) பழங்காலத் தமிழர் பெற்றிருக்கவில்லை. ஆகவே, அவற்றை அறிந்துகொள்ள வேண்டின், அவ்வவ் விடங்களுக்கு நேரில் சென்று அறிந்துகொள்வது தவிர வேறு வழியில்லை. பரணர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் மலைகள், ஆறுகள், ஊர்கள் இவற்றின் இயல்புகளை நன்முகத் தெரிந்து பாடியுள்ளார் : பல அரசர்களைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் ; வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந் தலை, கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை போன்ற போர்க்கள நிகழ்ச்சிகளை விளங்க விரித்துரைத்துள்ளார் ; கழார்ப், பெருந்துறை நீர்விழாவில், ஆட்டனத்தி மறைந்தது; கரிகாலன் வெண்ணியில் பெற்ற கன்னிப்போர் வெற்றி குறித்து அழுந்துரில் விழா நிகழ்ந்தது; நறுமா தின்ருள் ஒரு பெண் என்பதற்கு நன் னன் அவளைக் கொன்றது; பாழியில் வேளிர் பெரும் ப்ொருள் சேர்த்து வைத்தது ; தந்தையின் கண்ணைப் போக்கிய கோச ரைப் பழிவாங்க வஞ்சினம்கொண்ட அன்னி மிஞ்லியின் செய்கை; மஜனவியைப் பிரிந்து, பரத்தையொடு வாழ்ந்த பேகன் செய்கை ஆகிய இந் நிகழ்ச்சிகளே அறிந்து கூறியுள்ளார். இவ்வாறு இவற்றை யெல்லாம் உள்ளவாறு உணர்த்தல், நேரில் உணர்ந்தார்க் கன்றி இயலாது ; பரணர் தமக்கென ஒர் இடத்தை வரைந்துகொள்ளாது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற எண்ணமுடையாய்த் தமிழகமெங்கும் சுற்றிக் கண்டு களித்து வாழ்ந்தவர் என்பது இதனுல் புலம்ை.