பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைம்ை 23.

' ஆர்வுற்று, இாங்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்

பாந்து வெளிப்படாதாகி வருந்துக தில்ல யாய் ஒம்பிய நலனே.”

தமிழரசர்கள் ஆற்றலும் பெருமையும் உடையவரே ! ஆனால், அன்பும், அருளும் உடையாால்லர்; மக்களுக்கு இருத்தல்கூடாது என விலக்கப்பட்ட குணங்களாகிய பொருமை, ஒற்றுமையின்மை போன்ற இழிகுணங்கள், அவர்கள்பால் எவ்வாருே அமைந்துவிட்டன , தமிழகம் தாழ்ந்தமைக்குத் தமிழ்அரசர்கள் பால் இருந்த இக்குறை பாடுகளே காரணமாம். ஒருகாலத்தில், ஒர் அரச குலத் தில் ஆற்றல்மிக்க அரசன் ஒருவன் தோன்றி விட்டால், அவன், தன் ஆற்றலை, ஏனைய இருபேர் அரசர்களும், மற்ற குறுகிலமன்னரும் உணரும் வண்ணம், அவர் நாடுகளே வென்று அகப்படுத்த கினேப்பதும், அவன் காலத்தில், பிற இரு நாடுகளே ஆளும் வலிவற்ற அரசர்கள், ஏனேய குறுகில மன்னர்கள் துணையைப் பெற்ருவது, அவ்வரசன் ஆற்றலை அடக்க, அவன் காட்டின் மீது கூட்டாகப் படையெடுப்ப தும், தமிழக வரலாற்றில் கானும் வழக்காரும். தமிழாசர் களின் இப் போராட்டத்தின் விளைவாய்த் தமிழகத்தின் நாடும், நகரமும், வீடும், வயலும் பாழாயின; காட்டுமக் களும் அழிந்து பெருந்தியர் உற்றனர் ; காணக் கலங்கும் இக் காட்சிகளைக் கானும் புலவர்கள் கண்ணிர்விட்டுக் கலங் கினர்; அவ்வழிவுக்காட்சியை, அரசர்களுக்கு அறிவு வரும் வகை பொதுவாக அமைத்துப் பாடுவதையும், அரசர் களே அடுத்து கின்று, ' நின்வெற்றிச் சிறப்பால் விளைந்த பகைவர் நாட்டு அழிவு இவை” எனக்கூறி, அவன் வெற்றி யைப் பாராட்டுவார்போல், அவன் அறியாமையினே அறி வுறுத்துவதும் செய்துள்ளனர். இப்பெரும் பணியில் பரணருக்கும் பங்குண்டு. .

அரசன் படைக்கலம் ஏந்திப் போருக்குப் புறப்பட்டு விட்டான்; இனிப் புனல் சூழ்ந்து வளங்கொழிக்கும் இப் பணயூர், யானே புகுந்து ஆடிய குளத்துநீர், கலங்கிச் சேருவது போல், அழகிழந்து அழிந்துவிடுமே ! ...