பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ப ண ர்

' படைதொட் டனனே குருசில் ஆயிடைக்,

களிறு பொரக் கலங்கிய தண்கயம் போலப், பெருங்கவின் இழப்பது கொல்லோ, மென்புனல் வைப்பின் இத் தண்பனை ஊரே !’

குளத்துக் கயல்மீன்களைப் பிடித்து உண்ண, நாரை கள் கண்மூடிக் காத்திருக்கும்; காத்திருக்கும் நாரைகள், அஞ்சி ஒடுமாறு, அக்குளத்து வாளைமீன்கள், அவற்றின் மீது பாயும் ; பாயும் வாளைமீன்களைக் குளத்தில் நீராடிச் செல்லும் மகளிர் பிடித்துக்கொண்டு வீடுசெல்வர்; இத் தகைய வளமிக்க ஊர், நாளே என்னும் அவ்வூருக்குரிய அரசன், பகைவர்மீது போர்தொடுத்துவிட்டான்; இனி, அவ்வழகிய ஊர் அழியவேண்டி வருமே !

' கயலார் நாரை யுகைத்த வாளை,

புனலாடு மகளிர் வளமனை யொய்யும், ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ!'

என்று பாடிப் புலம்பும் பரணர் பாடல்கள் பலப்பல.

பாணர், பல்லாண்டு வாழ்ந்து பல போர்க்களங்களைக் கண்டவர்; ஆதலின், போர்க்களக் கொடுமைகளை நன்கு உணர்ந்தவராவர்; போர்க்கள கிகழ்ச்சியால் பாழான ஊர் களில் வாழ்வார் துன்புறுவதினும், அப்போர்க்களத்திற்கு அண்மையில் வாழ்வோர், இப்போரின் முடிவு என்னுமோ! பகைவர் படை எந்நேரத்தில் நம் ஊருள் புகுந்துவிடுமோ! எத்தகைய அழிவு நமக்கு வந்து சேருமோ !” என்று அஞ்சும் அச்சம், அவர் கண்முன் வந்து கிற்கின்றது; அவ் வச்சத்தால், அம்மக்கள் கண்கள் உறங்குவது இல என்ப தையும் உணர்கிருர்; உணர்ந்த பரணர், தாம் பாடிய அகத் துறைப் பாடல் ஒன்றில், கவலையால் கண் துஞ்சாது இருக் கும் ஒரு தாயின் செயலுக்குப் பகைமுகத்து ஊர்களில் வாழ்வோர், தேட்டின. எதிர்நோக்கி இரவு பகல் கண் மூடாது கலங்கி கிற்கும் செயலே உவமை கூறிப் போரின் கொடுமை கண்டு கண்ணிர் விடுகிருர்,