பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 27

" தாயில் தாவாக் குழவி போல,

ஒவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.”

என்று பாடியுள்ளார்.

வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்தாரை, அறிவுரைகூறித் தெருட்டி நல்வழிப்படுத்தும் பண்பும் பரணர்பால் இருக்கக் காண்கிருேம். பேகன் என்பான் ஒரு பெருங் கொடை வள்ளல்; அவன் புகழ்கேட்டு, அவனைக் கண்டு பாடச் சென்றார் , அங்கே அவன் இல்லை ; அவன் மனைவி கண்ணகி யைக் கண்டு அவன் யாண்டுளன் என்று வினவிகின்றார் ; அவர் கேள்வி, அவள் கண்களில் நீரைத் தேக்கிற்று ; அவள், அதைத் தன் விரல்களால் துடைத்துக்கொண்டே, ' அவன் ஈண்டிலன்; என்போல்வாள் ஒருத்தியோடு உறவு கொண்டு முல்லேகல்லூரின்கண் வாழ்கின்ருன்,' என்ருள். கேட்ட பரணர், மனம் பதறிஞர் ; பெரிய வீரனும், சிறந்த கொடைவள்ளலுமாகிய அவனிடத்தில் தகாத ஒழுக்கம் இருக்கலாமா என்று எண்ணினுள் ; அவனைப் பாடி மகிழ் வித்து, அவன் அளிக்கும் பரிசில்பெற்று மீள்வதினும், அவனே கல்லோன் ஆக்குதல் தம்போல்வார் கடனும் என உணர்ந்தார். ' குதற் பொருட்டன்று கட்டல், மிகுதிக் கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு, என்று கொண் டார் ; உடனே, பேகன் வாழ்க்கிருந்த முல்லைகல்லூருக்குச் சென்றார்; அங்கே, தம்மையொத்த புலவர்களாகிய கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றார்கிழார் முதலியோரும் அவ லுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதைக் கண்டார் ; பேகன நெருங்கிப், பேக எம்மையொத்த பெரும்புல வர்க்குப் பரிசில் அளிக்கவேண்டும் என்று விரும்புவை யாயின், இன்றே தேர்ஏறிச்சென்று, கின் மனைவியோடு வாழ்தல்வேண்டும்; அதுவே நீ எமக்களிக்கவல்ல பரிசில்,” என்று கூறினர். அவனும், அவர் வேண்டுகோளே மறுத் தற்கஞ்சி, முல்லைகல்லூர் விட்டுத் தன்பதி அடைந்து மனேவியோடு மகிழ்ந்து வாழ்வானுயினுன் ; பேகனின் இவ் வாழ்வில் பரணருக்கும் பங்குண்டென்பது பெருமைக்

குரிய செயலன்ருே