பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ப ர ண ர்

யாண்டேனும், அப் புறத்தினத் தலைவர் குறிப்பிடப் படின், அது அகத்தினப் பொருளுக்குச் சிறிதும் தேடு விளக்கா கிலேயில்ேயே வருதல் வேண்டும்:

    1. புறத்தின மருங்கின் பொருத்தின் அல்லது, அகத்தினை மருங்கின் அளவுதல் இலவே.”

என்று வரையறை விதிப்பர் ஆசிரியர் தொல்காப்பியனுர், பரணர், இத்தகைய வரையறைகள் உள ; அவற்றை மதித் தல் மதியுடையோர் செயல் என்பதை உணர்ந்த, அவற் நிற்குக் கட்டுப்பட்டே, புறத்திணேத் தலைவர் வரலாறு பல வற்றையும், அவ்வகத்துறைப் பாடல்களிலேயே அமைத் துப் பாடியுள்ளார் என்றால், வரலாறு உரைப்பதில் அவ ருக்கிருக்கும் உள்ள வேட்கையை என்னென்பது !

மூவேந்தருள் சிறந்த இருவராகிய, கரிகாற் சோழனே யும், சேரன் செங்குட்டுவனேயும் பாடியுள்ளார் ; நன்னன் வரலாற்றை விளங்க அறிவதற்குப் பரணர் டாக்களே பெருந்துணை புரிகின்றன ; ஆதிமந்தி ஆட்டனத்தி வர லாற்றைத் தமிழகம் அறியச் செய்தவர் இவர் ; கடையெழு வள்ளல்களுள், பாரி ஒருவன் நீங்க, எஞ்சிய அறுவரையும் பாராட்டியுள்ளார் ; இவர்களே அல்லாமல், படைத்தலைவர் களாகவும், பெருவீரர்களாகவும், கொடைவள்ளல்கனாக வும் விளங்கிய பலரையும் நமக்கு அறிமுகம் செய்துள் ளார்; தமிழகத்தின் தலைசிறந்த மலைகளையும், பேராறுகளே யும், பெரும் சகரங்களையும் அறிந்து அறிவித்துள்ளார் ; தமிழ்மக்கள், தமிழ் அரசர்கள் இவர்களின் வாழ்க்கை யில் காணும் அரிய வழக்கங்களை எல்லாம் எடுத்துக் காட்டி யுள்ளார். சுருங்கக் கூறின், இரண்டாயிரம் ஆண்கேட்கு முன்னிருத்த, தமிழ்நாட்டு அரசியலே அவர்துணை இன்றி அறிதல் இயலாது எனலாம்; ப:ணர்பால் காணப்பெறும், வரலாறு உரைக்கும் இப் பண்புடைமைக்குத் தமிழுலகம் என்றென்றும் நன்றி செலுத்துமாக

. . . . . LDaఉతాaడ్కి அகக்குறை, புறக்குறை இரண்டாலும் • * உண்டாம்; அகக்குறை, தாம் மேற்கொண்ட இல்லறத்தின்