பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ப ணர்

உடனே புலவர்கள அனைவரும் அவரை வணங்கி கின்றனர் அவரும் மறைந்தார்.

புலவர்கள் அனைவரும், இறைவன் செய்த களவிய லுக்கு உரையெழுதி முடித்தனர். பின்னர்த் தங்கள் உர்ைகளின் தகுதி தகுதியின்மைகளே அறிந்து கூறுமாறு இறைவன் திருமுன் கின்று முறையிட்டனர். இறைவன், புலவர் வடிவில் வந்துகின்று, இவ்வூர் உப்பூரிகுடிகிழார் மகளுர் ஊமை உருத்திரசன்மன்முன் உங்கள் உரைகளைக் கூறி, அவன் கூறும் முடிவினே ஏற்றுக்கொள்ளுங்கள்,' என்று கூறினர். புலவர்கள், ஊம்ை உரைவளங் காண்பது எவ்வாருே என உளங்கவன்றனர்; புலவர் மனக்கவல்ே அறிந்த மன்ருடி, ! உங்கள் உரைகளை அவன்முன் படி யுங்கள்; யார் உரை, கேட்டவழி கண்ணிர் உகுப்பனே, அவ்வுரையே மெய்யுரை என உணருங்கள்,” என்று கூறி மறைந்தார். புலவர்கள் ஊமை மகனே மன்றம் கொணர்ந்து மண்டபத்தேற்றி, அவன்முன் தம் உரைகளைப் படித் தனர் ; ஊமை, நக்கீரர் கபிலர் பரணர் ஆகிய மூவர் உரை கேட்டபோதே கண்ணிர் உகுத்தமை கண்டு, அவ்வுரைகள் மூன்றுமே சாலச்சிறந்தன என அறிந்து, கலந்து வாழ்ந் திருந்தனர். - - - - . . .

(2) பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத் துச் சங்கப்பலகை தந்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் ஆகிய இரண்டும், பரணர் வாலாருகக் கூறுவன இவை : . . . . - . . . . . . காசியில் அசுவமேதயாகம் செய்துமுடித்த பிரமன், தம் மனைவியர், சரசுவதி, சாவித்திரி, காயத்திரி முதலி போருடன் கங்கை ரோடச் சென்ன்ை இடைவழியில் விஞ்சையன் ஒருவன் பாடிய இன்னிசை கேட்டு மயங்கிய சரசுவதி, அங்கேயே கின்றுவிட்டாள் ; கங்கையடைந்த - நான்முகன், நாமகள் இல்லாமை கண்டு, அவளே நீக்கி, அவ்விருவருடன் கங்தைமூழ்கிக் கரை ஏறினன். அங்கில யில் அங்கு வந்தசேர்க்த் காமகள், ' நான் இல்லாதபோது