பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர்கள் 59.

(1) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி:

சங்கநூல்களால் அறியப்பெற்ற சோழ அரசர்களுள், காலத்தால் முதற்கண்வைத்துச் சிறப் பிக் கப்பெறு வோன், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியே என்று கூறின், அது பொருந்தும், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகாற் பெருவளத்தான்ைப்பெற்றுப் புகழ் கொண்ட பேறுடையான் ஆவன் ; இது, ஆசிரியர் முடத் தாமக் கண்ணியார், பொருநராற்றுப் படையில், கரிகா லனே, உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்’ என்று பெயரிட்டு அழைப்பதால் தெளிவாகும். இளஞ்சேட் சென்னியின் மனைவி, அழுந்துரில் வாழ்ந்த வேளிர்குடி யிற் பிறந்த பெருமாட்டியாராவர் ; இது, மன்னர் பாங் கிற் பின்ன ராகுப' என்ற தொல்காப்பியம் அகத்திணே யியல் சூத்திரஉரையில், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, அழுந்துார்வேளிடை மகட்கோடலும், அவன் மகன், கரிகாற்பெருவளத்தான்், நாங்கூர்வேளிடை மகட் கோடலும்” என்று நச்சினர்க்கினியர் கூறுவதால் உறுதி யாகும்; அவ்வுரையின் பிற்பகுதி, உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னியின் மகன் கரிகாலன் என்ற பொருநராற். அறுப்படைக் கொள்கையை உறுதிசெய்வதும் காண்க. இளஞ்சேட் சென்னியின் மனைவி, அழுந்துார்வேள் மகள் என்ற கொள்கையை, இளஞ்சேட்சென்னியின் மகன் கரிகாலன், வெண்ணிப் பறந்தலையில் பெற்ற கன்னிப் போர் வெற்றி குறித்து, அழுந்துளரில் விழாக் கொண்டாடப் பெற்றது என்று அறிவிக்கும் பாணரின் அகநானூற்றுப் பாட்டொன்று அாண்செய்து சிற்பதுங்காண்க. இளஞ்சேட் சென்னி மகன் கரிகாலன் பிறப்பதற்குச் சின்னுட்களுக்கு. முன்னரே மாண்டுவிட்டான் என்ப. இவன்,அழகிய பல தேர்களுக்கு உரியவன் என்பதை அவன் பெயரைக் கொண்டே அறியலாம். இஃது உண்மையாம் என்பதைக், - 'கடலிடைத் தோன்றும் ஞாயிறேபோல், a - பொற்றேர்மீது பொலிவுதோன்ற விளங்குகின்றன’ என்று. கூறிப்பரணரும் உறு தி செய்வர். -