பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ப ம ன ர்

இளஞ்சேட் சென்னியைக் குறித்துப் பரணர் பாடிய பாட்டு ஒன்றே ; அவ்வொரு பாட்டிலேயே, அவன் படை யின் பாப்பும் சிறப்பும், அவன் ஆண்மையும் ஆற்றலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன :

வீரர் எந்திய வாள்கள், பகைவர் உடலைப்பிளந்து பிளந்து, குருதிக் கறைபெற்று, செவ்வானம்போல் சிவந்து தோன்றுகின்றன; வீரர்கள் களம் முழுதும் ஒடிப் போரிட்டமையால், அவர் காலிற் கட்டிய வீரக் கழல்கள் சித்திரவேலைப்பாடு சிதைந்து, கொல்லும் ஆனேற்றின் கூரிய கொம்புகள் போல் காட்சி யளிக்கின்றன ; கையிற் பிடித்த கேடயங்களில், பகைவர் விட்ட அம்புகள் பட்டுத் தோன்றிய துளைகள், இடம் பெயராது எழுதிவைத்த இலக்குகள்போல் இலங்குகின்றன ; குதிரைகள் மேலேறிய வீரர்கள், பகைவரைப் பாய்ந்து பாய்ந்து தாக்க, வலமும் இடமும் மாறிமாறித் திருப்புவதால், கடிவாளத்தால் தாக் குண்டு இரத்தம் கசியும் வாயுடையவாய் கிற்கும் காட்சி, மான் முதலியவற்றைக் கடித்து உண்டு இரத்தக் கறை ப்டிய கிற்கும் புலிபோல் தோன்றுகின்றன ; யானைகள், பகைவர் கோட்டையின் வாயிற்கதவுகளே முறித்து அழித்து துனிசிதைந்த வெண்கோடுடைவாய் வெகுண்டு கிரிவன, உயிர் உண்ணும் எ மனப்போல் தோன்றும் ; இளஞ்சேட்சென்னி, குதிரைகள் பூட்டிய பொற்றேர் மீது கருங்கடல் மீது எழும் செஞ்ஞாயிறுபோல், சினத்தால் சிவந்து தோன்றுவன். இளஞ்சேட் சென்னியும், அவன் படையும் இத்தகையன ஆதலைக்கண்டு, அவன் பகைவர் நாட்டுமக்கள், தாயற்ற குழந்தை தான்் உண்ணும் உண வைப் பெறமாட்டாமையால் ஓயாத அழுவதைப் போல்,

அாற்றலும் அழுகையும் உடையாாயினர்.'

  • , "வாள், வலக்கா மறுப்பட்டன,

o செவ்வா னத்து வனப்புப் போன்றன ; தாள், களங்கொளக் கழல் பறைந்தன, கொல்ல் ே so.o.o.o.o. . . . . . . . . .