பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 - ப ர ன ர்

இவனே வேறுவேறு சூழ்நிலையில் பாடியிருப்பாயின், கிள்ளியின் வரலாற்றின் மேலும் சில பகுதிகள் வெளியாகி யிருக்கல் கூடும்; ஆனால், அவர்கள் இருவரும், இவன் வாழ்க்கையின் ஒரு பகுதியையே பாடியுள்ளனர்; அகனுல், கிள்ளியின் வர்லாற்றின் முழுப்பகுதியையும் அறிந்து கொள்ள இயலாமற் போய்விட்டது. அவர்கள் பாக்களால் அறிந்துகொள்ளக்கூடிய ஒரே செய்தி, சோழன் வேற்பஃ. றடக்கைப் பெருவிறற் கிள்ளியும், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் பகைத்து மேற்கொண்ட போரில், இருவர் படையும் அழிய, இருவரும் களத்திலேயே மாண்ட னர் என்பதே; இதுவன்றி, வேறு எதையும் நம்மால் அறிய - முடியவில்லை. : * ..

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்ற இவன் பெயர், கிள்ளி போற்றல் வாய்ந்தவன் ; வேற்படை மிக்க வன் ; வேலேந்திப் போரிடும் விறல் படைத்தவன் என் பனவற்றை விளக்கும் இவனே க் குறித்தப் பாணர் பாராட்டிக் கூறியவற்றைப் பரணர் பண்புகள் ' என்ற தலைப்பின்கீழ்க் கண்டுகொள்க. (8) சோமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்:

சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்குக் கூறிய வரலாறு இக்குடக்கே நெடுஞ்சேரலாதனுக்கும். பொருந்தும், அவனைப் பாடியவர்களே இவனேயும் பாடி யுள்ளார்கள் ; அவனே ஒரு பாட்டிலும் இவனே வேறு ஒரு பாட்டிலுமாகப் பாடாமல், அவர்கள் பாடிய பாக்கள் ஒவ் வொன்றிலும் இருவரையும் ஒன்று சேர்த்தே பாடியுள்ளார் கள் ; ஆகவே, குடக்கோ நெடுஞ்சேரலாதனும், வேற்பஃ நடக்கைப் பெருவிறற்கிள்ளியும் பகைவர்; இருவரும் ஒரு களத்தில் மடிந்தனர் என்பதே இவன் வாலாருகவும் கொள்ளுதல் வேண்டும். . . ! - சேர அரசர்களுள், நெடுஞ்சேரலாதன் என அழைக்

நெடுஞ்சேரலாதன்; மற்றொருவன், இமயவரம்பன் நெடுஞ்.