பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர்கள் 79

வென்றி மேவல் உருகெழு சிறப்பின் கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக ; மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே என்றும் இகல்வினை மேவலை யாகலின், பகைவரும் தாங்காது புகழ்ந்த அங்கு கொள முழவின் தொலையாக் கற்ப.” - (பதிற்று : சங்.) செங்குட்டுவன், போர் பல புரிந்து பெற்ற பொருள் கள் இவை, அருமை உடையவை ; நமக்கு வேண்டுவன - என்று கருதாது, போரிற் பெற்ற பொருள்களே எல்லாம், தன்பால்வந்து இயந்தார்க்கு வாரி வாரி வழங்கும் வண்மை உடையனே அன்றி, நான் துயர்நிலையில் உள்ளேன்; என் துயர் களைந்து ஒம்புக’ என்று ஒருவர்பின் கின்று இரப்பதைக் கனவினும் கருதாக் கவின் உடையன் ;

'பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற,

அரிய வென்னது ஒம்பாது வீசிக், கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும் களைக என அறியாக் கசடில் நெஞ்சத்து

என்று செங்குட்டுவன் தன், சுரத்கல் அல்லது இரத்தல் - அறியாச் சிறப்பைப் பரணர் பாராட்டினர். செங்குட்டு வனப் பாடிச்சென்ற பாணர், கூத்தர்போன்ற இரவல் மாக்கள், அவன் இவ்வாறு சிறந்த கொடை வள்ளலாய் விளங்குவது கண்டு, அவனே விட்டுப்பிரிந்து வேற்றார் செல்லவோ, கம்மூர் கண்ணவோ எண்ணுராய், என்றும் அவன் பக்கலிலேயே இருக்க எண்ணுவர் : -

வெல்புகழ்ச் குட்டுவம் கண்டோர்,

செல்குவம் என்னர் பாடுபு பெயர்ந்தே' -(பதிற்று: சசு.) என்றும் பாராட்டும் பரணர்பாக்களின் நலனறிந்து மகிழ்க. * செங்குட்டுவன் ஆற்றல்மிக்க அரசனுகவும், எம்ருேர் இன்முகம் கண்டுவக்கும் உயர்கொடையாளனுகவும்