பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 81

செங்குட்டுவன் சிறப்புச்செய்யச் சேரநாட்டில் சில ஆண்டு வாழ்ந்திருந்த பரணர், செங்குட்டுவன் உவக்கு மாறு, அவன் புகழ்தோன்றப் பல பாக்கள் பாடினர்; அவனே அவர் பாராட்டிய பாடல்கள், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்திலும், புறநானூற்றிலும், அகநானூற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

(5) பேகன் :

மதுரை மாவட்டத்தில் பொதினி என்ருேர் மலே யுண்டு; அது ஆவிநன்குடி என்ற பெயராலும் வழங்கப் பெறும்; மக்கள் அதைப் பழனிமலை என இப்போது அழைக்கின்றனர். ஆவிநன்குடி, முருகன் உறையும் அஆறு பெரும் குன்றுகளு ள் ஒன்றாம் என்பதற்கேற்ப, அம் மலைக் குரியோன் எனப்படும் நெடுவேள் ஆவி என்பான், முரு கனேயொத்த போற்றல் உடையான் என முருகனேடு உவமிக்கப்பட்டுள்ளான் . 'முருகன் தற்போர் நெடுவேள் ஆவி. அப் பொதினிமலையும் தெய்வக்காப்புடையது என்று நால்களில் கூறப்பட்டுள்ளன : அருந்திறல் கட வுள் காக்கும் உயர்சிமை.”

வள்ளல்கள் என வாழ்த்தப்பெறும் பேறுபெற்ருேர் எழுவராவர்; அவர்கள் ஒவ்வொருவரும் வள்ளல்தன்மை யில் ஒத்திருப்பது போன்றே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மலையினைத் கங்களுக்கு உரிமையாகப் பெற்றிருப்பதிலும் ஒற்றுமைகொண்டிருக்கக் காண் கிருேம் ; பாரிக்குப் பறம்பு, காரிக்கு முள்ளுர், ஒரிக்குக் கொல்லி, ஆய்க்குக் கவிரம், அஞ்சிக்குக் குதிாை, நள்ளிக்குத் தோட்டி என உரிமைப்படுத்திப் பாடி யிருப்பதைப்போன்றே, பேகனுக் குப் பொதினிமலை உரிமை உடையது எனப் புலவர்கள் கூறியுள்ளனர். பழனிமலையில் உள்ள குளத்தின் பெய ாாகிய வையாவிக்குளம் என்பதற்கும், அப் பொதினி மலைக்குரியோனுகிய பேகனின் மற்ருேர் பெயராகிய வையாவிக்கோ என்பதற்கும் உள்ள ஒற்றுமை தொடர் பின்றி வந்ததன்று.

ப.-6