பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ப ண ர்

மலே நாட்டிற்குரிய பேகன், பெருங்கல் நாடன்” எனப் புலவர்களால் அழைக்கப் பெறுவான். அவன் ஆவி யர் குடியிற் பிறந்தவன்; புலவர்கள், ஆவியர் கோவே,” ‘ஆவியர் பெருமகன்,” என்றெல்லாம் அவனே அழைப்பது காண்க; அவன் பெயர்க்கு முன்வரும், 'வையாவிக்கோ’ என்ற சிறப்புப் பெயரும், அவன் ஆவியர்குடியில் வந்த வன் என்பதை உறுதிசெய்தல் காண்க. தமிழ்நாட்டின் ஏனேய குடிகளின் தோற்றமும் தொன்மையும் அறியக் கூடாதனவாய்க் காணப்படுதலேபோன்று, இவ் அதியர் என்பார்கம் தொடக்க வரலாறும் அறியக் கூடவில்லை.

நெடுவேள் ஆவி அறுகோட்டு யானைப் பொதினி, நெடு

வேள் ஆவி பொன்னுடை செடுசகர்ப் பொதினி” என்ற

'தொடர்களில் வரும் நெடுவேள் ஆவி என்பவனே, இவ்

ஆவியர்குடி முதல்வளுவன் என்பர் சிலர்; அஃது உண்மை பாயின், இவ் ஆவியர் என்பவரும் வேந்தர்க்கு மகட்

. கொடுக்கும் உரிமைபெற்ற வேளிருள் ஒரு பிரிவினராவர் எனக் கொள்ளலாம்; ஆனால், மேற்கூறிய தொடர்களில் வரும் நெடுவேள் ஆவி என்ற சொற்றெடரை, அக

நானுாற்று அரும்பத உரையாசிரியர், "ஆவி நெடுவேள்” என மாற்றி, ஆவி நெடுவேள் - குறுகில மன்னன்’

எனப் பொருள்கூறி இருப்பதை நோக்கின், அந் நெடுவேள்,

என்பான், ஆவியர்குடியில் வந்தவன் ஆவன் என்றே

பொருள் கொள்ளவேண்டி யிருத்தலின், அவன், அக்குடி முதல்வன் ஆகான்; அக் குடியில் வந்தோருள் இவனும்

ஒருவன் என்றே கருதுதல் வேண்டும்; இதனுல், அக்குடி

முதல் விளங்கவில்லை என்பதே முடிபாகக் கொள்க.

3.

ஒருநாள் உலாப் போந்த பேகன், குளிர்ந்த வாடை

வீசவும், விசும்பில் முகிற்குலம் கறுத்துத் திரண்டு மூடிக் கொள்ளவும் கண்ட மயிலொன்று தன் தோகை விரித்து மகிழ்த்து ஆடுதலைக் கண்ணுற்றுக் களித்து கின்ருன்; அதுவும் தன்சீனப்போன்றே வாடையால் வருந்துகிறது

என்று எண்ணினன்; அதன்பால் இரக்கம் பிறந்தது;

வாடையால் வருந்துகிறது.